போகர் சப்தகாண்டம் 2006 - 2010 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2006 - 2010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2006. உரைக்கையிலே நவகண்டரிஷிகள்தாமும் வுயர்நாகமலை யடிவாரத்தில்
திறக்கமுடன் சமாதியது நிலையுங்கண்டார் திறலான நவகண்ட ரிஷியுங்கண்டார்
சிறக்கமுடன் நவகண்டரிஷியாசீர்மம் சென்றாறாமெங்களையர் குருவாந்தேவர்
இறக்கம்வைத்து வவரெனக்கு வுபதேசங்கள் யெழிலாகத்தானுரைத்தார் கண்டார்தாமே

விளக்கவுரை :


2007. கண்டமா முனியோரும் வுபதேசிக்க காலாங்கி குருதானும் களிப்புகொண்டு
மண்டலமெல்லாம் புகழும் நவகண்டதேவர் மார்க்கமுடன் எந்தனுக்கு வதீதஞ்சொல்வீர்
விண்டலத்தினதிசயங்கள் யாவுஞ்சொல்லி வேதாந்ததாயினது ரூபஞ்சொல்லி
கொண்டணைத்து வெந்தனுக்கு குறைவைத்தீர்த்து கோடியுகங்காணவென குறைதீர்ப்பீரே

விளக்கவுரை :

[ads-post]

2008. தீர்க்கவென்று கேட்டவுடன் நவகண்டர்தாமும் திரளான நாலுயுக வதிசயங்கள்யாவும்
பார்க்கவே யெடுத்துரைத்தார் குருநாதர்க்கு பாங்குபெற யாவற்று மறிந்துகொண்டார்
ஆர்க்கவே யென்னையர் காலாங்கிநாயர் அவருடைய விசுவாச வருளும்பெற்றார்
மார்க்கமுடன் யென்னையர் ஞானம்பெற்று மானிலத்தில் வெகுகாலம் இருந்திட்டாரே

விளக்கவுரை :


2009. இருந்தமுனி காலாங்கி வெகுகோடிகாலம் யெழிலான வித்தைகளுமற்புதங்கள் செய்தார்
குருந்தமுடன் எந்தனுக்கு ஞானவுபதேசம்கூறினார் சங்கற்பமனந்தம்பேர்க்கு  
திருந்தவே வுபதேசமானபின்பு தீரமுடன் சமாதிக்கு யேதுகொண்டார்
பொந்தவே யடியேனும் வுபதேசம்பெற்று புறப்பட்டேன் சீனபதிதேசந்தானே

விளக்கவுரை :


2010. தேசமாமின்னம்வெகு தேசமெல்லாம் சிறப்புடனே குளிகையது பூண்டுகொண்டு
ஆசையுடன் சத்தசாகரமும் கண்டேன் அன்பாகப் பாடிவிட்டேன் சத்தகாண்டம்
பூசையுடன் ஏழாயிரக்காவியத்தை புகட்டினேன் லோகத்துமாந்தர்க்கப்பா
யாசையுடன் பரிபாஷை யில்லாமற்றான் பாரினிலே பாடிவிட்டேன் பண்பதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar