போகர் சப்தகாண்டம் 2011 - 2015 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2011 - 2015 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2011. பண்பான குளிகையது பூண்டுகொண்டேன் பாங்கான பாரீசபதியைக்கண்டேன்
திண்பான பச்சையென்ற மலையைக்கண்டேன் திகழான கந்தருவர் மனிதர்கண்டேன்
நண்பான மனிதருக்கு ரெக்கைரெண்டு நாதாக்கள் குளிகைகொண்டு பறந்தார்போல
கண்பான கந்தருவர் மாந்தரப்பா கடையான மலைமீதில் இருந்தார்பாரே

விளக்கவுரை :


2012. பார்த்தேனே கந்தருவர் தன்னைக்கண்டேன் பாகுடனே யவர்பக்கல்சென்றுயானும்
நேர்த்தியுடன் மேலோகவதிசயத்தை நேர்ப்புடனே யானுமல்லோ கேட்டேன்மைந்தா
தீர்த்தமுடன் இந்திரனார் கொலுசிறப்பை சிறப்புடனே எந்தனுக்கு தாமுரைத்தார்
சார்த்தமுடன் அம்மலையிற் சுனையுமுண்டு சட்டமுடன் சுனையோரம் சென்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

2013. சென்றேனே சுனைகண்டேன் குகையுங்கண்டேன் சிறப்பான கொங்கனவர் பதியுங்கண்டேன்
குன்றான மலையோரம் சமாதியுண்டு கூட்டமுடன் அங்கிருந்தார் சித்தர்கூட்டம்
பன்றானபூசையது ஆசீர்மத்தை பாங்குடனே கண்டுவிட்டே னடியேனப்பா
தன்றான திரேதாயினுகத்திலப்பா வர்க்கமுடன் எல்லவரும் பிறந்தார்தாமே

விளக்கவுரை :


2014. தாமான வர்க்கத்தோர் அனேகருண்டு சார்புடனே வவர்களிடம் சென்றுயானும்
நாமான வஞ்சலிகள் மிகவுஞ்செய்து நடுக்கமுடன் நிற்கையிலே வடியேன்தன்னை
பூமான சித்தர்முனி கூட்டத்தார்கள் புத்தியுள்ள பாலாநீ யாரென்றார்கள்
காமான காலாங்கிதனை நினைத்து கர்த்தனிட சீஷினென்று வுரைத்திட்டேனே

விளக்கவுரை :


2015. உரைத்துமே வெண்பேரு போகரென்றேன் வஉறுதியுடன் சீனபதிபோயிருந்தேன்
திரைகடல்கள் ஏழுவரைசுற்றிவந்தேன் தேசாதிதேசமுள்ள சித்தர்தம்மை
வரைமுறைகள் தப்பாமல் கண்டுவந்தேன் வளமுடனே குளிகையது வலுமையாலே
இறையவனார் கொங்கணர் பாதங்காண வெழிலுடனே வந்திட்டேன் பாரிஷதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar