போகர் சப்தகாண்டம் 2016 - 2020 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2016 - 2020 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2016. தானென்று சொல்லுகையில் சித்தர்கூட்டம் சடுக்கெனவே கொங்கணவர் பக்கஞ்சென்று
தேனான சமாதியிடம் வாசற்பக்கம் தேவாதி தேவருடசமாதியோரம்
கோனான குருவான சாமிபாதம் குறிப்புடனே யெல்லோருங் கூட்டமிட்டு
பானான காலாங்கி நாயர்சீஷர் பட்சமுடன் தன்பாதம் வந்திட்டாரே

விளக்கவுரை :


2017. வந்தாரே போகரிஷிபாலன்தானும் வண்ணமுடன் தாமுரைத்தார் சித்தரெல்லாம்
அந்தமுடன் அவர்சொல்ல கொங்கணவர்தாமும் அன்பான காலாங்கிபேரைக்கேட்க
சந்தோஷமுண்டாகி சமாதிதன்னில் சட்டமுடன் வருவதற்கு விடையுஞ்சொன்னார்
கந்தருவர் போலவல்லோக்குளிகைபூண்டு கர்த்தரிடம் சென்றேனே போகர்தானே

விளக்கவுரை :

[ads-post]

2018. போகரென்று சொன்னேனே யடியேனுந்தான் பொங்கமுடனெந்தனுக்குத்தீரமாகி
ஆவலுடன் கொங்கணவர்பாதம்போற்றி அப்பனேசரணமென்று பணிந்திட்டேன்யான்
காவலுடன் தான்கடந்துவந்தபாலா பாரினிலே சித்தரப்பா ரிஷிகள்கூடி
சாபமுடன் உந்தனையும் சபிப்பாரப்பா சாக்கிறதை யவர்களிடம் சார்பாய்நில்லே

விளக்கவுரை :


2019. நிற்கையிலே வுத்தாரமெதிர்சொல்லாதே நிறைகுறைகள் நேர்ந்தாலும் பதரிடாதே
சிற்பனார் காலாங்கி தனைநினைத்து சீருடனே யவர்களுக்குத் தொண்டுபண்ணி
அற்புதங்கள் யாவனைத்தும் கண்டறிந்து அவர்களிடம் விசுவாசவருளும்பெற்று
சற்பனையோ டெந்நாளுங் காலாங்கிதம்மைச் சதாகாலம் கருத்தினிலே நினைத்திடாயே

விளக்கவுரை :


2020. நினைக்கையிலே எண்ணமெல்லாம் சித்தியாகும் நீடூழிகாலம்வரை இருக்கலாகும்
உனைப்புகழ்வார் லோகத்துமாந்தரெல்லாம் ஓகோகோ நாதாக்களிவர்போலுண்டோ
முனையான காலாங்கி சீஷனல்லோ மூதுலகில் பேர்கொண்ட சீஷனென்பார்
தினையளவு யாம்சொன்ன வுபதேசங்கள் தீர்க்கமுட னெந்நாளுங் கொள்ளுவீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar