2021. கொள்ளவென்றால் இன்னமொரு
வுபதேசங்கள் குவலயத்தில் யாம்சொல்வோ முந்தனுக்காய்
விள்ளவே எமைப்போல
யாருஞ்சொல்லார் மேதினியில் யாமுரைத்தோம் பட்சம்வைத்து
வுள்ளபடி ஞானவுபதேசமெல்லாம்
வூடுருவ எந்தனுக்கு ஓதித்தேதான்
எள்ளளவு இடையூறும்
வாராமற்றான் எந்தனுக்கு வரமதுவும் கொடுத்தார்பாரே
விளக்கவுரை :
2022. பாரேதான் சீனபதிதன்னில்
வந்து பட்சமுடன் கமலரிடம் வந்தேனப்பா
சீரேதான் கமலருக்கு
வடியேன்தானும் சிறப்புடனே கொங்கணவர் செய்திசொன்னேன்
நேரேதான் கமலருமே
சந்தோஷித்தார் நேர்மையுடன் விடைபெற்றுப் பதிக்குள் வந்தேன்
வேரேதான் வினோதங்கள்
வதீதஞ்செய்தேன் மிக்கான சீனபதிக்குள்ளேதானே
விளக்கவுரை :
[ads-post]
2023. தானான வின்னமொரு
மார்க்கங்கேளு தயவாகச் சொல்லுகிறேன் மாணாக்கற்காய்
பானான சாரமது கட்டிவாங்கி
பக்குவமாய் புடம்போட வரிசைகேளு
தேனானசீனமது ஒன்றேயாகும்
தெளிவான காரமது ஒன்றேயாகும்
வேனான இந்துப்பு வளையலுப்பு
வெடியான வுப்பதுவும் ஒன்றாய்க்கூட்டே
விளக்கவுரை :
2024. கூட்டவே சிப்பியென்ற
சுண்ணந்தானும் குணமான பூநீருவொக்கச்சேர்த்து
நீட்டமுடன் வெண்கருவா
லரைத்துமேதான் நிலையான சாரமதுக்கங்கிபூட்டி
வாட்டமுடன் ரவிதனிலே
காயவைத்து வளமாக சீலையது வலுவாய்ச்செய்து
நாட்டமுடன் குழிவெட்டி
மணல்தான்கொட்டி நலமாகப்புடம்போடப் பத்துமாமே
விளக்கவுரை :
2025. பத்தான புடமதுவு மிந்தபாகம் பாகமுடன் முன்போலப் போட்டுத்தீரு
புத்தான சாரமது
கட்டிப்போகும் போக்கான புகையதுவு மடங்கியேதான்
தத்தான தந்தம்போலாகும்பாரு
மகத்தான சாரமிது சித்தர்வேதை
சித்தான செந்தூர
மென்னசொல்வேன் சிவன்தானுமாயிக்குத்தான் சொன்னாரே
விளக்கவுரை :