2026. சொன்னவுடன் ஆயிதானும்
காலாங்கிக்குச் சூட்சமுடன் தானுரைக்கக் காலாங்கிதாமும்
நன்னயமாய் எந்தனுக்கு
சொன்னபாகம் நாட்டிலே நாதாக்கள் கூறவில்லை
பொன்னான செந்தூர
மார்க்கங்கேளு புகழான சாரமது கட்டிட்டாக்கா
மன்னான பொன்னாவரையின்
மூலிமயங்காமல் தேங்காய்போல் கவசஞ்செய்யே
விளக்கவுரை :
2027. செய்யவே சீலையது செய்தபின்பு
செழிப்புடனே ரவிதனிலே காயவைத்து
பையவே தளவாயின் சட்டிமேலே
பாங்குபெற வுப்பதனைக் கொட்டிமைந்தா
மையவேகட்டி நடுமைவைத்து
மறவாமல் வுப்பதனைமேலேகொட்டி
முய்யவே மேல்சட்டிகொண்டு
முசியாமல் தானெரிப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :
[ads-post]
2028. எட்டான சாமமது
யெரிக்கும்போது யெழிலான சாரமது சிவப்புயேறி
திட்டான கட்டியது
சிவந்துகாட்டும் திறமுடனே கவசமதை திறந்துபாரு
மட்டான சிவப்புடனே
மங்கல்காட்டும் மார்க்கமுடன் கட்டிதனை காற்றில்வைநீ
கட்டான செந்தூரம்
பூர்த்துக்காட்டும் கடுஞ்சுறுக்கு வேதையிது வோடுமாமே
விளக்கவுரை :
2029. ஓடவே செந்தூரம் பதனஞ்செய்து
வுத்தமனே செம்பதனில் தாக்கும்போது
கூடவே களிம்பதுவும்
மிகவுநீங்கி குணமுடனே மாற்றதுவு மெட்டதாகும்
நீடவே பழுப்பான பொன்னுகாணும்
நேர்மையுடன் பத்துக்கு ரெண்டுவெள்ளி
சாடவே தானுருக்கி
வாரடித்துச் சட்டமுடன் புடம்போட பசுமைகாணே
விளக்கவுரை :
2030. காணவே சுடரொளியின்
பசுமைத்தங்கம் பாருலகில் சித்தரல்லால் ஆர்செய்வார்கள்
பூணவே கருவாளியாகவேண்டும்
புத்தியுள்ளான் பாக்கியவானாகவேண்டும்
மாணவே சாத்திரங்கள்
கற்றோர்காண்பர் மடையனோ வாய்வீணன் காணமாட்டான்
நாணவே நல்லொழுக்கானாயிருந்து
நாதாக்கள் கிருபையது பெற்றோர்தாமே
விளக்கவுரை :