போகர் சப்தகாண்டம் 2031 - 2035 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2031 - 2035 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2031. பெற்றாலும் பேரின்பம் பெறவேவேண்டும் பேடிபோல் மண்ணாசை பெண்ணாசைதன்னை
அற்றவற்கே லகிரியானந்தம் வாய்க்கும் ஆனந்தபரஞ்சுடருங் காணலாகும்
மற்றாலுமொன்றுமில்லை வையந்தன்னில் மயங்கினாலொன்றுமே காணமாட்டார்
பற்றற்ற ஞானியாயிருந்தாயானால் பாருலகில் சர்வசித்தும் ஆடலாமே

விளக்கவுரை :


2032. ஆடலாஞ் சாரமென்ற கட்டியாலே அப்பனே கட்டனதார் சாரந்தன்னை
கூடவே சாரத்திற் குறுதிகேளு குணமுடனே சாரணைகள் செய்வாயப்பா
நீடவே சாரத்தில் குழிபோல்பண்ணி நேர்புடனே சூதமதை வுள்ளேதாக்கி
போடவே நெருப்பதனில் கட்டிவைக்கப் பொங்கமுடன் சூதமது வெண்ணையாமே

விளக்கவுரை :

[ads-post]

2033. வெண்ணையென்ற சூதமதை எடுத்துமைந்தா விபரமுடன்சொல்லுகிறேன் சாற்றக்கேளு
கண்ணனிட மூலியதுக்குள்ளேவைத்துக் கருவாக சீலையது வலுவாய்ச்செய்து
திண்ணமுடன் கோழியென்ற புடத்தைப்போடு திருவான சூதமது மடிந்துகொல்லும்
எண்ணமுடன் சூதமதை செந்தூரிக்க யானுஞ்சொல்வேன் வபரமதாய்க் கேளுகேளே

விளக்கவுரை :


2034. கேளேதான் சூதமிடை வொன்சுறயாகும் கெடியான வீரமிடை காலேயாகும்
பானேதான் துத்தமது துருசுதானும் பாங்கான கெந்தியது காலதாகும்
வீளேதான் காந்தமது சிலையுங்கூட்டி விரிவான வளையலென்ற வுப்புகூட்டி
தூளேதான் மதியுப்பு காரத்தோடு துடியான இந்துப்பு காலதாமே

விளக்கவுரை :


2035. காலான பூநீறு வுப்புமாகும் கருவான சாரமுடன் பூரந்தானும்
பாலான வரிதார மடலுப்பாகும் மகத்தான சீனமது காலாய்ச்சேர்த்து
வேலான பொற்றலையின் சாற்றாலாட்டி விருப்பமுடன் ரவிதனிலே காயவைத்து
பாலான பொடிசெய்து மாவதாக்கி பாலகனே செந்தூர மார்க்கங்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar