2036. கேட்கவே காசியென்ற
குப்பிக்கேழு கெடிதான சீலஐயது வலுவாய்ச்செய்து
நீட்டமுடன் குப்பிக்குள்
மருந்தைப்போட்டு நினைவாக மரக்கல்லு கொண்டுமூடி
தாட்டிகமாய் சட்டிதனில்
மணலைக்கொட்டி சாங்கமுடன் குப்பிநடுமையம்வைத்து
வாட்டமுடன்
மேலுமந்தமணலைக்கொட்டி வகுப்புடனே மேல்சட்டிகொண்டுமூடே
விளக்கவுரை :
2037. மூடவே சீலையது
வலுவாய்ச்செய்து முசியாமல் வாலுகையில் யேற்றிமைந்தா
நாடனே கமலாக்கினி
யெட்டுசாமம் நலமுடனே தானெரிப்பாய் மதிப்பதாக
நீடவே தீயாறி யெடுத்துப்பாரு
நினைவுடனே குப்பியது கறுத்துக்காணும்
சாடவே குப்பியது
வுடைத்துப்பாரு சாங்கமுடன் செந்தூரம் அதிதமாமே
விளக்கவுரை :
[ads-post]
2038. அதீதமாஞ் செந்தூரம்
பதனம்பண்ணு அப்பனே வெள்ளியதில் பத்துக்கொன்று
வதீதமுடன் தானுருக்கி
குருவொன்றீய வளமுடனே கறுத்தநிறங்காணும்பாரு
சதீதமாம் ஓட்டில்வைத்து ஊதிப்போடு
சாங்கமுடன் பசுமையது மாற்றோயெட்டு
கதீதமுடன் பத்துக்கு
ஒன்றுதங்கம் கருவாகத் தானுருக்கிச் சாய்த்திடாயே
விளக்கவுரை :
2039. சாய்க்கவே வாரடித்துப்
புடத்தைப்போடு சட்டமுடன் பசுந்தங்கமாகும்பாரு
காய்க்கவே செம்புதனில்
பத்துக்கொன்று கடினமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு
மாய்க்கவே
கரியோட்டிலூதிப்போடு மகத்தான செம்பதுவும் பழுப்புபொன்னாம்
தேய்க்கவே பத்துக்கு
வொன்றுதங்கம் தேற்றமுடன் தானுருக்கி புடத்தைப்போடே
விளக்கவுரை :
2040. போடவே மாற்றதுவு மதிகமாகி
புகழான பொன்னதுவும் காந்திமெத்த
நீடவே நாதாக்கள்
செய்யும்வேதை நிலையான மாணாக்கள் அறிவாறோதான்
கூடவே கருவாளி காண்பான்பாரு
குணமில்லான் குடிகெடுக்கும் பாவிகாணான்
நாடவே காலாங்கி பாதம்போற்றி
நலமுடனே பாடிவைத்தேன் நன்மைபாரே
விளக்கவுரை :