போகர் சப்தகாண்டம் 2041 - 2045 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2041 - 2045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2041. நன்மையா மின்னமொரு கருமானங்கேள் நாட்டிலே யாரறிவார் இந்தப்போக்கு
கண்மையாம் தாம்பூரத்துட்டுவாங்கி கருவாக வுப்புபுளி காரஞ்சேர்த்து
திண்மையாம் பழச்சாற்றால் தானரைத்துத் திறமுடனே செப்புக்கு கவசஞ்செய்து
நன்மையுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து நலமுடனே புடம்போடச் சுத்தியாமே

விளக்கவுரை :


2042. சுத்தியா மிப்படியே பத்துமுறைபோடு சுருக்கமுடன் செம்புக்குப்பாதி மருந்தாகும்
மத்தியே புடம்போட சுத்தியாகும் மகத்தான சுத்திசெய்து பொடியதாக்கி
துத்தமுடன் வெள்ளையென்ற பாஷாணந்தான் துடியான வீரமுடன் காரந்தானும்
சத்தியுடன் சூதமதுக் கூடச்சேர்த்து சதுராகப் பேரண்டம் சரியாய்க்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

2043. கூட்டியே தானரைப்பாய் எருக்கம்பாலால் குமுறவே நாற்சாமமரைத்தபோது
வாட்டமுடன் மெழுகதனை யெடுத்துமைந்தா வளமுடனே செம்புதனைராவிக்கொண்டு
நீட்டமுடன் தான்பிசறி மூசைக்கிட்டு நேர்புடனே சில்லிட்டுச்சீலைசெய்து
தாட்டிகமாய் சரவுலையில் வைத்துவூது சாங்கமுடன் சுன்னமது வாகுந்தானே

விளக்கவுரை :


2044. வாகான சுன்னமதை எடுத்துமைந்தா வளமையுடன் முன்போலச் சரக்குச்சேர்த்து
பாகான பதமுடனே வூதுவூது பசப்பற்ற பற்பமது வாய்க்கும்பாரு
வேகான பற்பமது வைந்துதரமூது வேகாது பச்சையென்ற செம்புதானும்
போகாது களிப்பதுவும் அற்றுநீங்கி புகழான பற்பமது தவளமாச்சே

விளக்கவுரை :


2045. ஆச்சிந்த பற்பத்தைப் பின்னுமைந்தா அழகுபெற சிற்றண்டம் சவ்வுபோக்கி
பேச்சொன்று மில்லாமல் சரியாய்க்கூட்டிப் பேராக மூசையிட்டு சீலைசெய்து
காச்சென்ற பச்சையது நீங்கிப்போக கடுந்தீயில் பின்னொருக்காலூதித்தீரு
மாச்சென்று மில்லாத பற்பமாச்சு மகத்தான பற்பமது பின்னுங்கேளே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar