2046. பின்னுமே பற்பமதைக்
கல்வமிட்டு பேரான சாரமென்ற செயநீர்தன்னால்
மின்னவே தானரைப்பாய்
நாலுசாமம் மிக்கான சரக்கதனை மூசையிட்டு
கன்னான சீலையது
வலுவாய்ச்செய்து கருவாக வூதிடவே பற்பமாகும்
மன்னான பற்பமதை
யெடுத்துமைந்தா மகத்தான ரஸ்தாளி பழத்தில்தாக்கே
விளக்கவுரை :
2047. தாக்கவே பழமதுவும்
இருகிக்காட்டும் தனியான பசும்வெண்ணெய் தன்னிலப்பா
நோக்கமுடன் வரிசியெடை
அனுபானத்தில் நுட்பமுடன் தானருந்த தேகம்கற்றூண்
சேர்க்கமுடன் நரைதிரையு
மற்றுப்போகும் சூட்சமுடன் கண்ணிரண்டும் துலக்கங்காணும்
ஆக்கையது யிறுகியல்லோ சட்டைதள்ளும்
அவணிதனில் நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
[ads-post]
2048. ஆமேதான் வாலையது
போலேதோற்றும் அப்பனே வயததுவும் பண்பாய்க்காட்டும்
நாமேதான் சொன்னபடி
பற்பங்கொண்டால் நாட்டிலே யுன்னையொரு சித்தனென்பார்
வேமேதான் பற்பமது
வெள்ளீயத்தில் விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய
தேமேதான் மாற்றதுவும்
யெட்டதாகும் தேசத்தில் சித்தர்செய்யும் வேதையாச்சே
விளக்கவுரை :
2049. வேதையிலே தாம்பூரத்தில் வேதையப்பா வெகுகோடி வேதையிது தாம்பரவேதை
பாதையாம் சித்தர்செய்யும்
வேதைமார்க்கம் பாருலகில் கருவாளி செய்வான்பாரு
தீதையிலே சண்டாளத்
துரோகியோற்குத் திசைகெட்டு முறைகெட்டுத் தேராதொன்றும்
ஆதையுடன் பற்பமென்ற
பற்பந்தன்னை அனுபான யெண்ணெய்தன்னில் கலந்திடாயே
விளக்கவுரை :
2050. கலந்த எண்ணை பணயெடைதான்
அந்திசந்தி கவனமுடன் தானருந்த வாலையாவாய்
பலமதிகமுண்டாகும்
பாலர்க்கப்பா பாரினிலே ராசாக்கள் காண்பராகில்
வலமுடனே யோடிவந்து
ஆசீர்மித்து வரைகோடி திரவியங்கள் மெத்தயீய்ந்து
நலமுடனே பற்பமதை
கைக்கொள்குவார்கள் நாட்டிலே பற்பமது நவிலொண்ணாதே
விளக்கவுரை :