போகர் சப்தகாண்டம் 2051 - 2055 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2051 - 2055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2051. ஒண்ணான தங்கமென்ற காசுதன்னை வுத்தமனே களஞ்சியது பத்ததாகும்
கண்ணான ரேக்கதுவும் கொண்டுவந்து கவனமுடன் மாசியென்ற பத்திரிதன்னால்
குண்ணான காசமது பொசித்துப்போட்டு குன்றியிடை சீனமது வொக்கச்சேர்த்து
தண்ணான நாற்சாம மரைத்தபோது தாக்கான மெழுகுபோலாகும்பாரே

விளக்கவுரை :


2052. பாரேதான் மெழுகுதனை வட்டுசெய்து பண்பாக ரவிதனிலே காயவைத்து
நேரேதான் வோட்டிலிட்டுச் சீலைசெய்து நேர்பாகப் புடம்போடச் செந்தூரிக்கும்
காரேதான் செந்தூரமெடுத்துப்பாரு கருப்பான செந்தூரம்போலே காணும்
தீரேதான் பத்துமுறை யிப்படியேபோடு திறமான செந்தூரமாகுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2053. தானேதான் செந்தூர மெடுத்துமைந்தா தாரமுடன் கெந்தியது காலாய்க்கூட்டி
மானேதான் கட்டினதோர் சாரமொன்று மார்க்கமுடன் எட்டிலோர் பாகஞ்சேர்த்து
நாமேதான் சொன்னபடி செயநீர்தன்னால் நலமாகத்தானரைப்பாய் நாலுசாமம்
வேமேதான் ஆறுவகை செயநீர்தன்னால் விருப்பமுடன் அரைத்துபில்லை விரைவாய்த்தட்டே

விளக்கவுரை :


2054. தட்டையிலே பில்லையது பணம்போலாகச் சாங்கமுடன் தட்டியல்லோ காயப்போடு
வட்டமென்ற வகல்தனிலே பரப்பிமைந்தா வளமுடனே வகல்மூடிசீலைசெய்து
மட்டமென்ற கோழியது புடமதாக மதிப்புடனே வோட்டிலிட சிவப்புமாகும்
திட்டமுட னிப்படியே மூன்றுமுறையப்பா சிறப்பாகப் புதிம்போடச் சிவக்குந்தானே

விளக்கவுரை :


2055. சிவப்பான செந்தூரம் பதனம்பண்ணு தேசத்தில்கிட்டாது சிவயோகிக்கு
தவக்கியானி யானாக்கால் யெல்லாஞ்சித்தி தாரணியில் அவன்போலச் சித்தனுண்டோ
பவமுடையோர்க் கிந்நூல்தான் வாய்க்காதப்பா பாரினிலே விட்டகுறையானவர்க்கு
சிவன்செயலால் கிடைக்குமே யிந்நூலப்பா தேசத்தில் மற்றவர்க்கு கிடையாதன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar