2056. தானான முன்யுகத்தில்
காலாங்கிக்குத் தாக்கான மிருத்துவரிஷியின்சாபம்
கோனான பொன்னகரம் போயிருந்து
கோடித்தார் கண்ணபிரான்தன்னையப்பா
தேனான திரேதாயுகத்தில்தானும்
தெளிவான சுத்தனாங் காலாங்கிவையா
பானான குருசுவாமி சாபத்தாலே
பாலனாங் காலாங்கிசாபம் போச்சே
விளக்கவுரை :
2057. போனபின்பு காலாங்குருவாஞ்சாமி பொன்னகரம் போயிருந்து பட்டமாச்சு
தானானவனாங் கருவூரார்
கமலந்தாமும் தயவுடனே சீனபதிபோயிருந்து
வானானவனாங் காலாங்கி
சீஷனென்னை வரவழைக்க கியாபகத்தில் நினைத்தபோது
பானமுட னடியேனும்
குளிகைபூண்டு பறந்திட்டேன் சீனபதிதேசந்தானே
விளக்கவுரை :
[ads-post]
2058. தேசமென்றால் தேசமது
போயிருந்தேன் சிறப்பான கமலமுனி தன்னைக்கண்டேன்
ஆசையுடன் அவர்பாதம்
பணிந்தேனப்பா அப்பவே குருசாபம் நிவர்த்தியாச்சு
பூசையுடன் காலாங்கி
நாயர்தம்மை பூசித்தேன் திரேதாயி னுகத்திலப்பா
நேசமுடன் எந்தனுக்கு
கலியுகத்தில் நேர்மையுடன் சாபமது நிவர்த்தியாச்சே
விளக்கவுரை :
2059. ஆனபின்பு கலியுகத்தில்
நூற்றுப்பத்தில் அன்புடனே குளிகைகொண்டு பறந்துயானும்
வானவருக் கொப்பான போகரென்று
வையகத்தில் கீர்த்தியுடன் பேருபெற்றேன்
தேனான காலாங்கி பாதஞ்சென்று
தெரிசித்து அவருடைய வருளுங்கொண்டேன்
கோனான என்னையர் குருவினாலே
கோடியுகஞ் குவலயத்தில் வாழ்ந்திட்டேனே
விளக்கவுரை :
2060. வாழ்கவே குளிகையது
பூண்டுகொண்டு வையகத்தில் சுற்றியெங்கும் பார்க்கவென்று
வீழாத குளிகையுடன்
மேருசென்றேன் விருப்பமுடன் நாற்றிசையும் காணும்போது
தாழ்கவே மேருவுக்கு
வடபாகத்தில் தாக்கான மனிதரெல்லாம் தங்கவர்ணம்
மூழ்கவே வயததுதான்
லட்சமாகும் முனையான தெய்வமது சத்தியாமே
விளக்கவுரை :