2061. சத்தியாம் மேருவுக்கு
கிழக்கேயப்பா சார்பான மனிதரல்லோ நீலவர்ணம்
நித்தியமாம் வயததுதான்
ரண்டுலட்சம் நிலையான தெய்வமது விஷ்ணுவாகும்
புத்தியுடன் மேருவுக்கு
மேற்கேயப்பா புகழான மனிதரப்பா ரத்தவர்ணம்
சுத்தஇயுடன் கோறுவது
கைலையாகும் சொரூபமென்ற போதமென்னும் நிலைநிற்பாரே
விளக்கவுரை :
2062. நிற்பாரே வயததுதான்
ரண்டுலட்சம் நித்தியமும் சொரூபமென்ற நிலையுங்காண்பர்
சிற்புடன் மேருவுக்கு
தெற்கேயப்பா சிறப்பான மனிதரப்பா மைனவர்ணம்
கர்மமென்ற வயததுதான்
நூறென்பார்கள் கலியுகத்தில் இருப்பதுவும் இல்லைதானே
சொற்பமென்ற வயதுதனில்
மாண்டுபோவார் சுந்தரனே அக்கிரமங்கள் மிகவுண்டாமே
விளக்கவுரை :
[ads-post]
2063. உண்டான மனிதரப்பா
கொடியசெய்கை வுற்பனமாம் மரியாதையில்லாமாண்பர்
மிண்டான முறைதப்பும்
சண்டிமாண்பர் மீளாதகொடியதொரு பாவியாகும்
சண்டாள மையல்கொண்டு
தாறுமாறாய்ச் சடுதியிலே சடமழிந்து போவாரப்பா
பண்டான சூதுகளும்
பொய்யுமாகும் பாங்கான மனிதரப்பா நடத்தைபாரே
விளக்கவுரை :
2064. பாரேதான் சாத்திரங்கள்
மெத்தவுண்டு பாங்கான பொய்ஞானி மெய்ஞானியுண்டு
சீரேதா னுண்ணுவது வனேகவர்ணம்
சிறப்பான காய்கறிகள் பாலுங்கொள்வர்
நேரேதான் பழவர்க்கம்
கொள்வாரப்பா நிறைவான லாகிரிகள் அனந்தங்கொள்வர்
வேரேதான் மனிதரப்பா
மூன்றுபாகம் முன்சொன்ன மனிதரப்பா பழமுண்பாரே
விளக்கவுரை :
2065. உண்பான மின்னமொரு மார்க்கங்கேளு ஒளிவான வீரமது கொச்சிவீரம்
தின்பான சீனத்தின் வீரமப்பா
திறமான வீரமது பலமொன்றாகு
பண்பான வீரத்தின் தயிலம்பாரு
பாங்கான ஆனையென்ற விலாங்குதானும்
நண்பான விலாங்கதனை
தயிலமாக்கி நலமாக கெந்தகத்தை விட்டுதாக்கே
விளக்கவுரை :