போகர் சப்தகாண்டம் 2066 - 2070 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2066 - 2070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2066. தாக்கவே சேரென்ற கெந்திதன்னை தயவாகத் தானரைப்பாய் நாலுசாமம்
நோக்கவே தானரைத்து பின்னுங்கேளு நுணுக்கமுடன் வழித்தயில மிறக்கிப்பின்பு
தேக்கவே வீரமது சுறுக்குதாக்கு தெளிவுடனே வீரமது கட்டேயாகும்
பார்க்கவே மேற்கவசம் சொல்லக்கேளு பதிவாக துருசுடனே சிங்கியாமே

விளக்கவுரை :


2067. சிங்கியென்ற மிருதாரு சிங்கியப்பா செழிப்பான பூரமுடன் துத்தமாகும்
இங்கிதமாம் சாரமுடன் காரமாகும் எழிலான காந்தமுடன் குருந்தக்கல்லாம்
தங்கமுடன் சவ்வாது புணுக்குபூரம் தகமையுள்ள வபினியுடன் கெந்திதானும்
அங்கமுள்ள லிங்கமுடன் சீனந்தானும் அப்பனே வகைவகைக்கு விராகனொன்றே

விளக்கவுரை :

[ads-post]

2068. ஒன்றான இத்தனையும் சரியாய்க்கூட்டி வுத்தமனே தேன்விட்டு மெழுகதாக்கி
பன்றான மெழுகுபதம் தன்னிலாட்டி பதமுடனே மெழுகதனை எடுத்துமைந்தா
நன்றான வீரத்துக்கங்கிபூட்டி நலமாகப் புடம்போடக் கட்டும்பாரு
அன்றான மெழுகதனை வைந்துபங்காக்கி அப்பனே வீரத்துக்கங்கிபூட்டே

விளக்கவுரை :


2069. பூட்டியே யிப்படியே யைந்துதரமப்பா புகழாகக் கலசத்தில் சீலைசெய்து
நீட்டமுடன் மணல்மறைவில் புடத்தைப்போடு நெடிதான வீரமது கட்டும்பாரு
வாட்டமுடன் மேற்கவசம் தன்னைப்போக்கி வளமுடனே வைந்துதரம் பூசியேதான்
பூட்டமென்ற புடந்தனிலே போட்டாயானால் புகழான வீரமது கட்டும்பாரே

விளக்கவுரை :


2070. கட்டான வீரமது மணியெடுத்து கண்ணான கண்மணியே கருத்தாய்கேளு
மட்டான வுப்பதுவும் சேர்த்துப்பாரு மதிப்பான வெடியுப்பு வளையலுப்பு
தட்டான பாறையென்ற வுப்புகூட்டி தளராத கல்லுப்பு சமனாய்ச்சேர்த்து
வட்டான சட்டிதனில் போட்டுமைந்தா வளமுடனே திருகள்ளி பாலையூத்தே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar