போகர் சப்தகாண்டம் 2071 - 2075 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2071 - 2075 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2071. ஊத்தையிலே பாலதுவும் மிகவும்பொங்கி வுத்தமனே சுண்டமட்டும் எரிப்பாயப்பா
நாத்தமுள்ள கள்ளியது பாலுஞ்சுண்டி நலம்பெறவே கட்டியல்லோ சுண்டிருக்கும்
ஏத்தமுள்ள மேல்சட்டி கொண்டுமூடி எழிலாகச் சீலையது மிகவுஞ்செய்து
போத்தமுடன் வாலுகையி லடுப்பிலேற்றிப் பொங்கமுடன் தானெரிப்பாய் சாமமெட்டே  

விளக்கவுரை :


2072. எட்டான சாமமது எரிக்கும்போது எணமகனே வுப்பதுவும் வுகிக்கிக்கட்டும்
மட்டான வுப்பதுவும் கட்டியல்லோ மார்க்கமுடன் பற்பமது போலேகாணும்
திட்டான வுப்பதுவும் பொடியதாக்கி திறலான சட்டிதனில் பாதிப்போட்டு
கட்டான வீரமதை நடுவில்வைத்து கருத்துடனே மற்றபொடி மேலேபோடே

விளக்கவுரை :

[ads-post]

2073. போடேதான் சட்டிகொண்டுமூடி பொங்கமுடன் தானெரிப்பாய் மூன்றுநாளும்
நீடேதான் எரித்தபின்பு எடுத்துப்பாரு நெற்றிசிவன் தானெரித்த பற்பமாகும்
வாடாத பற்பமது புகலப்போமோ வளமையுள்ள பற்பமது பதனம்பண்ணு
தேடான செம்பெடுத்து பத்துக்கொன்று தெளிவுடனே தானுருக்கிக் கொடுத்திடாயே

விளக்கவுரை :


2074. கொடுத்தவுடன் செம்பதுவும் ஊறலேகி குணமாகும் ரவிதானும் கட்டிப்போகும்
தடுக்காமல் வெள்ளிதனில் நாலுக்கொன்று சாங்கமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
படுமுன்னே வெள்ளியது பழுக்கும்பாரு பாங்கான மாற்றதுவும் ஏழதாகும்
தொடுகுறிபோல் நாலுக்கொன்று தங்கம் தோராமல் தான்கொடுத்து வுருக்கிடாயே

விளக்கவுரை :


2075. உருக்குமுகந்தான்கொடுத்து வாரடித்து வுத்தமனே புடம்போடப் பழுப்புமாகி
தடுக்கென்ற பொன்னதுவும் தங்கமாகி தாரணியில் சித்தர்செய்யும் வேதையாகும்
குருக்குமுதல் அனேகவித வேதைகாணும் கோடானகோடி முறையிதுநாலாகும்
பருக்கலென்ற சிவப்புநிறம் கவலையப்பா பாங்குபெற பற்பமதை பிசறியூதே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar