போகர் சப்தகாண்டம் 2076 - 2080 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2076 - 2080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2076. ஊதையிலே மூசைக்குள் ளிட்டுமைந்தா வுறுதியுடன் சில்லிட்டு சீலைசெய்து
தோதமுடன் குகைவைத்து வூதும்போது துப்புறவாய்ச் சுன்னமது புகலப்போமோ
நீதமுடன் சுன்னமதை யனுபானத்தில் நிலைமையுடன் வெண்ணய்தனில் கொண்டுபாரு
சாதமுடன் மண்டலந்தான் கொண்டுவந்தால் சார்பாகும் மேகவகைபோகுந்தானே 

விளக்கவுரை :


2077. போகுமே மேகவகை யிருபத்தொன்றும் பொல்லாத நீரிழிவு குன்மச்சூலை
ஏகுமே நீர்சொரிப்பு நீர்ப்பனைப்பு என்மகனே வாசனத்தின் கடுப்புதீரும்
யாகமுடன் வனுபானந் தன்னிலீய பறக்குமடா நோயேது காந்தமேது
தாகமுடன் வூஷ்ணங்கள் எல்லாம்போகும் சதாகாலம் தேகமது குளிர்ச்சியாமே

விளக்கவுரை :

[ads-post]

2078. குளிருமே தேகமது கற்றூணாகும் குடிகெடுக்கும் சயரோகம் அகன்றுபோகும்
நளிருடனே நரம்புவலி சடலம்விட்டு நடுங்கியே கானகத்தில் தானேபுக்கும்
விளிருடனே கண்துலக்க மிகுதிகாட்டும் விரைவுடனே சுவாசமது கீழேநோக்கும்
களியுடனே இருமலது சடலம்விட்டு கண்ணுமே யெப்போதும் அணுகாதாமே

விளக்கவுரை :


2079. தாமேதான் தேகமது கற்றூணாகும் தனியான வாதமது கீழ்நோக்காகும்
காமேதான் சேத்துமங்கள் தொண்ணூற்றாகும் கடல்போகும் தப்பாது கருதிப்பாரு
வேமேதான் பத்தியங்கள் ஒன்றுமில்லை வெகுகோடி காலமது தேகம்போகா
நாமேதான் காலாங்கிநாதர் பாதம்நான் வணங்கி போகரிஷி நவின்றவாறே  

விளக்கவுரை :


2080. வாறான நூல்பார்த்து கால்கள்பார்த்து வளப்பமுடன் அடிமுடியுந்தானும்பார்த்து
கூறான கடைபார்த்துக் குறிப்பும்பார்த்து கோடான கோடிமுறை தானும்பார்த்து
சேறான கைபாகம் செய்யாகந்தான் செழிப்புடனே செய்பவனே சித்தனாவான்
நாறான பூவதுவில் மணஞ்சேர்ந்தார்ப்போல் நாட்டிலே செய்பவன் யோகியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar