2081. யோகமுடன் இன்னமொரு மார்க்கம்பாரு ஒளிவீசும் தாரமுடன் லிங்கந்தானும்
சாகமுடன் வானையுட தயிலத்தாலே
சட்டமுடன் தாளகத்தை அரைத்துமைந்தா
பாகமுடன் லிங்கத்தின்
மேலேபூசி பக்குவமாய் ரவிதனிலே காயவைத்து
தாகமென்ற முலைப்பாலைச்
சுறுக்குத்தாக்க தகமையுடன் தான்கருகி வுதிருமாமே
விளக்கவுரை :
2082. உதிர்ந்த தொருசரக்கதனை
எடுத்துமைந்தா ஓங்குபெற கல்வத்திலிட்டுமேதான்
கதிர்ந்திடவே வாறுவகை
செயநீர்தன்னால் கதிப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
சதிருடனே பில்லையது
தட்டியேதான் சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
முதிராமல்
ஓட்டிலிட்டுச்சீலைசெய்து முசியாமற் புடம்போடச் சிவக்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
2083. சிவப்பான செந்தூரம்
என்னசொல்வேன் சிவசிவாவெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
நலமுடனே ஒன்றுதள்ளி
வூதிப்போடு நாதாக்கள் செய்யுமிது வேதைகாணும்
தவமுடைய ஞானிகட்டு
எட்டுகாணும் தப்பாது லோபிகட்கு வாய்க்காதப்பா
பவநீக்கி இருப்பவர்க்கு
இந்தபாகம் பலிக்குமே தப்பாது பண்புளோர்க்கே
விளக்கவுரை :
2084. பண்பான காலாங்கி பாதம்தொட்டு
பாடுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நண்பான தங்கமது
களஞ்சிபத்தேயாகும் நலமான செம்பதுவும் களஞ்சிரண்டு
திண்பான வெள்ளியது
களஞ்சிரண்டு திறமுடனே நாகமது களஞ்சிநாலு
வண்பான வங்கமது
குன்றியிரண்டு வாகாகத்தானுருக்கி எடுத்துப்பாரே
விளக்கவுரை :
2085. எடுக்கையிலே மாற்றதுவும்
எட்டதாகும் யென்மக்காள் லோகத்துவாதிமாக்காள்
சடுக்கமென்னும் பத்தியினால்
அறியமாட்டார் சட்டமுடன் வரைதீர்ந்து வார்த்தை சொல்வார்
துடுக்கான வேதைமுகம்
காணமாட்டார் துறைமுகங்காணாமல் வெருமையாவர்
படுக்காளியுடன் கூடிபதமுங்கெட்டு
பாரினிலே யலைவார்கள் தாங்கள்தாமே
விளக்கவுரை :