போகர் சப்தகாண்டம் 2086 - 2090 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2086 - 2090 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2086. நாய்போல வலைவார்கள் சண்டிமாண்பர் நாதாக்கள் கைமறைப்பு வொன்றுங்காணார்
பேய்போன்ற பேயரல்லோ வீணாயக்கட்டு பிசகின்றி கெட்டவர்கள் கோடாகோடி
தாய்போல பஞ்சலோகந் தானிருக்கச் சதாகாலம் சீவனத்துக் குறைவுண்டாமோ
மாய்கையென்னும் கதைநீக்கி மைந்தாபாரில் மன்னவன் போல்வாழுவது சித்தனாமே

விளக்கவுரை :


2087. சித்தனா மின்னமொரு மார்க்கங்கேளு சீர்பெறவே செம்பதுவும் ஒன்றேயாகும்
புத்தியுள்ள சிஷ்யாநீ புகலவேண்டாம் புகழான வெள்ளியது மூன்றேயாகும்
புத்தமுள்ள தங்கமது வாறேயாகும் சூட்சமுள்ள வெண்காரம் குன்றிரண்டு
மொத்தமுடன் குகையிலிட்டுத் தானுருக்கி மோசங்கள் வாராமல் சாய்த்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

2088. சாய்க்கவே பொன்னதுவும் எட்டதாகும் சரியான நிறையுடனே வூட்டங்காணும்
ஏய்க்காது புடத்துக்கு உறுதிதங்கம் எவராலும் இடைபாகங்காணமாட்டார்
மாய்க்கவே நாதாக்கள் கூட்டுபாகம் நாமல்லோ மானிடர்க்கு பட்சம்வைத்தேன்
காய்க்கவே பொன்வேண்டுமானாலப்பா கருத்துடனே இப்படியே செய்துபாரே

விளக்கவுரை :


2089. பாரப்பா கூட்டுமுறை இன்னங்கேளு பாளமென்ற தங்கமது நாலேகாலாம்
சீரப்பா சுத்தமுள்ள செம்புதானும் சிறப்புடனே ஒன்றரையுமரிக்காலாகும்
கூறப்பா வெள்ளியது வரிக்கால்முக்கால் குறையாம லிடைபாகங் குணமாய்க்கொண்டு
வாரப்பா நாகமது குன்றிரண்டு வளமுடனே தானுருக்கி எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


2090. கொள்ளவே மாற்றதுவும் எட்டரையுமாகும் கோளாறுநீங்கியல்லோ மாற்றுகாணும்
எள்ளளவும் பிசகின்றி புடத்துக்கேகா எழிலான பொன்னதுவும் பசுமைமெத்த
தள்ளவே வேண்டாங்காணிந்தபாகம் தாரணியில் கிடைப்பதுவும் அரிதேயாகும்
உள்ளபடி சொன்னோமே காலாங்கிதம்மை வுறுதியுடன் நான்வணங்கி உரைத்தேன்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar