2091. தானான
பஞ்சகர்த்தாளாடுங்கூத்து தாரணியிலின்னமுண்டு சாற்றக்கேளு
பாரான பசுந்தங்கம்
வாறேகாலாம் பாங்கான செம்பதுவும் ஒன்றேமுக்கால்
தேனான வெள்ளியது
அரைக்காலாகும் தெளிவான நாகமது குன்றிமூன்று
மானான சரக்கெல்லாம்
ஒன்றாய்க்கூட்டி மாசிபெற குகையிட்டு வுருக்கிடாயே
விளக்கவுரை :
2092. உருக்கியபின் தானெடுத்து
உடைத்துப்பாரு உத்தமனே பொன்னதுவோ மாற்றுஎட்டு
பெருக்கமுள்ள வேலைக்கு
நயமுமாகும் பொன்காகமிதற்கீடு புகலப்போமோ
செருக்குடைய இத்தங்கம்
பசுமையாகும் ஜெகதலத்தில் நாதாக்கள் செய்யும்வேதை
திருகனுடன் கைமறைப்பு
மெத்தவேண்டும் தேசத்தில் கிட்டாது யோகிக்காமே
விளக்கவுரை :
[ads-post]
2093. யோகியென்றால்
சமுசாரிக்காகும் வேதை யொருவரால்வுள்ளாணிகழல்காணார்கள்
தேவியுடன் தானிருந்து
வாழும்வித்தை தேசத்தில் கிட்டாது கர்மிகட்கு
ஆவியுடன் காயமது
வழிந்திட்டாலும் அப்பனே யொருவருக்கும் விள்ளவேண்டாம்
தேவிகளோ மெத்தவுண்டு
படுக்காளிப் பட்சமுடன் நேசிப்பார் தூரத்தள்ளே
விளக்கவுரை :
2094. தள்ளுவது பூதலத்தில்
மெத்தநன்று தருமவான் கிடைப்பதுவும் அரிதேயாகும்
உள்ளபடி வின்னமொரு
மார்க்கம்பாரு வுற்பனத்தை ஆராய்ந்து வுருக்கித்தீரு
சள்ளையென்று விடுகாதே
மைந்தாபாரு சாத்திரமும் பொய்யாது மெய்யேயாகும்
கள்ளமின்றி செம்பதுவும்
இரண்டேகாலாம் கருவான வெள்ளியது வரைநாலாமே
விளக்கவுரை :
2095. நாலான வெள்ளியது
நாலரையுமாகும் நலமான செம்பொன்னு மிரண்டேகாலாம்
கோலான நாகமது ஒன்றேகாலாம்
குறிப்புடனே குகையிலிட்டு வுருக்கித்தீரு
பாலான வெள்ளியது பசுமையாகிப்
பழுப்புடனே பொன்னதுவும் மாற்றேழாகும்
சூலான வர்ணமது
வுள்ளேநிற்கும் சூட்சமுடன் வாரடித்துப் புடத்தைப்போடே
விளக்கவுரை :