போகர் சப்தகாண்டம் 2096 - 2100 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2096 - 2100 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2096. போட்டதுவும் பொன்னதுவும் மிகுதியாகிப் பொங்கமுடன் மாற்றுயர்வு காணும்பாரு
நீட்டமுடன் இன்னமொரு கருமானங்கேள் நெடிதான தங்கமது நாலேகாலாம்
வாட்டமுடன் செம்பதுவும் ஒன்றேகாலாம் வளமான நாகமது முக்காணியாகும்
தேட்டமுடன் வெள்ளியது வரிக்கால்காலாய் தெளிவான வங்கமது குன்றியாமே

விளக்கவுரை :


2097. குன்றியுடன் தானெடுத்து ஒன்றாய்ச்சேர்த்து குறிப்புடனே குகையிலிட்டு வுருக்கிப்பாரு
கண்றான மாற்றதுவு மெட்டேயாகும் தாக்கான பொன்னதுவும் நயப்புமாகும்
மன்றான பொன்னதுவை வாரடித்துப் பக்குவமாய்ப் புடம்போட பசுமைகாணும்
வென்றான சித்தர்முனி ரிஷிகள்பாகம் மேதினியால் அதீதமென்ற வித்தைதானே

விளக்கவுரை :

[ads-post]

2098. தானென்ற வித்தையிது யின்னஞ்சொல்வேன் சதாசிவமும் உமையவட்குச் சொன்னபாகம்
வேனென்ற தங்கமது வரிக்கால்ரண்டு வெளுப்பான செம்பதுவும் முக்காலாகும் 
காமென்ற கட்டியதோர் நாகம்கால்தான் கருவான வெள்ளியது ஒன்றேபாதி
யாமென்ற வெண்காரங் குன்றிகாணும் பாகமுடன் குகையிலிட்டு வுருக்கிடாயே

விளக்கவுரை :


2099. ஆனபின்பு பொன்னது மச்சங்கொண்டு அன்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு
பானமென்ற பொன்னதுவும் மாற்றுகாணும் பாங்கான வேதையிது சித்தர்வேதை
கானமென்ற கருமான மின்னமொன்று கருத்துடனே சொல்கிறேன் மைந்தாகேளு
வானமென்ற தங்கமதை ஒன்றுகூட்டி வளமாக செம்பதுவும் காலுகூட்டே

விளக்கவுரை :


2100. கூட்டியே வெள்ளியது வரிக்காலாகும் குணமான நாகமது வரிக்காலாகும்
வாட்டமுடன் தானுருக்கி எடுத்துப்பாரு வளமுடனே மாற்றதுவு மொன்பதாகும்
நீட்டமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு நெடிதாக மாற்றதுவும் ஏழதாகும்
தேட்டமுடன் சித்தர்களாம் செய்யும்வேதை தேசத்தில் சிவயோகிக் காணுவானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar