போகர் சப்தகாண்டம் 2101 - 2105 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2101 - 2105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2101. காணுவான் கருவாளி காண்பான்பாரு காசினியில் புத்தியுள்ளோன் விதியுள்ளோர்க்கும்
மாணவே இன்னமொரு மார்க்கம்பாரு மகத்தான செந்தூரம் மகிமையப்பா
ஊணவே கிருஷ்ணபிரோகம்காணும் வுத்தமனே சேரதுவும் நாலதாகும்
கானான வெண்ணையது செய்துகொண்டு கருவாக மையின்மதை எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


2102. கொள்ளவே நீதமது சேர்தான்ரண்டு கூரான வெடியுப்பு சேர்தான்பாதி
வில்லவே கெந்தியது சேர்தான்காலாம் வீரனவயச்சத்து சேர்தான் காலாம்
துள்ளவே மூன்றையுந்தான் ஒக்கக்கூட்டி தோராமல் குழிக்கல்லில் போடுமைந்தா
அள்ளவே எருக்கன்பால் விட்டரைத்து அப்பனே பில்லையது தட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2103. தட்டியே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
மட்டமென்ற கெஜபுடமே போட்டுமல்லோ மார்க்கமுடன் ஆறவிட்டு எடுத்துப்பாரு
திட்டமுள்ள செந்தூரம் கறுப்பாய்காணும் திரும்பியே இப்படியே பத்துமுறைபோடு
வட்டமுடன் செந்தூரம் கரியோடாகும் மார்க்கமுடன் சிவப்பதற்கு இன்னும்பாரே

விளக்கவுரை :


2104. பாரேதான் செந்தூரம் சிவப்பதற்கு பாசமுடன் ஆறுவகை செயநீர்தன்னால்
நேரேதான் காரமது எட்டுசாமம் நேர்ப்புடனே தானரைப்பாய் வெண்ணெய்போல
வேரேதான் பில்லையது தட்டிமைந்தா விபரமுடன் ரவிதனிலே காயவைத்து
சீரேதான் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து சிறப்பாகப் புடம்போடச் சிவக்குந்தானே

விளக்கவுரை :


2105. தானான செந்தூரம் நூறுபுடமாகும் தாக்கான வருணோதம் சொல்லப்போமோ
வேனான செந்தூரம் சத்துக்கொன்று விபரமுடன் தங்கமது ஒன்றுசேர்த்து
கானான ஆறுவகை செயநீர்தன்னால் கருத்துடனே பில்லைதட்டிக் காயவைத்து
மானான கோழியென்ற புடம்தான்போடு மாசற்ற செந்தூரம் புகலொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar