போகர் சப்தகாண்டம் 2106 - 2110 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2106 - 2110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2106. புகலவே செந்தூரம் பதனம்பண்ணு பொங்கமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
நிகலவே தானுருக்கு குருவொன்றீய நிலையான மாற்றதுவும் எட்டதாகும்
அகலவே நாலுக்கு ஒன்று தங்கம் அப்பனே கூட்டுமுறை தன்னில்சேர்த்து
தகலவே தானுருக்கி எடுத்துப்பாரு தகைமையுடன் மாற்றதுவும் மிகுதியாமே

விளக்கவுரை :


2107. ஆமேதான் செந்தூரம் சோதித்துப்பார் அப்பனே பச்சைமண் பாண்டந்தன்னில்
தாமேதான் சலம்விட்டு துவாரம்செய்து சட்டமுடன் செந்தூரம் குன்றிதானும்
போமேதான் போட்டவுடன் பாண்டம்தூக்கு போக்கான துவாரங்கள் அடைத்துகாணும்
நாமேதான் சொன்னபடி வரைதப்பாது நலமுள்ள செந்தூரம் அதீதம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2108. அதீதமாஞ் செந்தூரம் குன்றியுண்ணு அப்பனே மேகவகை இருபதும்போம்
கதீதமென்ற மதுமேகம் அழிந்துபோகும் கடல்போகும் நீரிழிவு காணாதோடும்
சதீதமென்ற செந்தூரம் அனுபானங்கள் சாற்றுகிறேன் வல்லாரைச்சூரணந்தான்
பதிதமென்ற வாவாரைச் சூரணந்தான் பட்சமுடன் அனுபானம் உண்ணுவீரே

விளக்கவுரை :


2109. உண்ணயிலே தேனாகும் நெய்யுமாகும் உத்தமனே பசுவெண்ணெய் தானுமாகும்
நண்ணயிலே கிரதங்கள் லேகியங்கள் நலமான சூரணங்கள் அனுபானந்தான்
கொண்ணையுடன் பூவதுவும் கிஷாயந்தன்னில் புகட்டவே மேகங்கள் போகும்பாரு
திண்ணையிலே கியாழவகை தன்னிலீய தெறிக்குமடா மேகவகை திண்ணந்தானே

விளக்கவுரை :


2110. திண்ணமுடன் காயமது இறுகிக்காட்டும் திரிந்தாலும் சுவாசமது மேல்நோக்காது
வண்ணமுடன் சதாகாலம் தேகம்கற்றூண் வளமையுடன் எப்போதும் வாழலாகும்
அண்ணலெனும் பராபரத்தை யணுகவேண்டும் யணுகாட்டால் காயுமில்லை பூவுமில்லை
சுண்ணமுடன் காலாங்கிதனை வணங்கி தாழ்மையுடன் பாடிவைத்தேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar