போகர் சப்தகாண்டம் 2111 - 2115 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2111 - 2115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2111. பண்பான காண்டமது என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள்செய்யும்வேதை
கண்பான கர்மிக்கு வாய்க்குமோசொல் கசடற்ற மாண்பருக்கு வாய்க்குமல்லால்
திண்பான கருவாளியானால் திறமுடனே யறிந்துகொள்வான் புண்ணியவானாம்
நண்பான போகரிஷி சொன்னமார்க்கம் நாட்டிலே யாரேனும் சொல்வார்தாமே

விளக்கவுரை :


2112. சொல்லவே தாம்பூரவேதை சொல்வேன் சுத்தமுடன் தாம்பூரத்துட்டு காணும்
வெல்லவே சேரதுதான் ரண்டதாகும் வெளியான கெந்தகமும் நாலதாகும்
கொல்லவே தூளாக்கி எடுத்துமைந்தா கோளாறு நேராமல் சொல்லக்கேளு
புல்லவே தளவாயஞ் சட்டிதனில் பொங்கமுடன் கெந்தகத்தை கீழேபோடே

விளக்கவுரை :

[ads-post]

2113. போடவே கெந்தகத்தைப் பாதிபோடு போக்கான கெந்தகத்தின் மேலேயப்பா
நாடவே வதின்மேலே துட்டைவைத்து நலமாக மேலுமந்த கெந்திபோடு
கூடவே மேல்சட்டி கொண்டுமூடி குமுறவே சீலையது வலுவாய்ச்செய்து
பாடவே வாலுகைகையா மடுப்பிலப்பா பாங்குபெற தானெரிப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


2114. எட்டான சாமமது எரிக்கும்போது என்மகனேதாம்பரமும் வெட்டையாகி
கட்டான வெட்டையது தொட்டியாகி கடுங்காரச் செம்பினது தொட்டியாச்சு
முட்டாளா யிருக்காமல் மைந்தாகேளு முயலலே தாம்பரத்தை எடுத்து மைந்தா
திட்டமுடன் கல்வமதில் இட்டுமைந்தா திறமுடனே பொடியதுவாம் நொறக்கிடாயே

விளக்கவுரை :


2115. நொறுக்கியே சூதமது சமனாய்ச் சேர்த்து நோக்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலு
பறுகவே மைபோலயரைப்பாயப்பா பாலகனே வில்லைதட்டிக் காயவைத்து
திறுகமுடன் வகலிலிட்டு சீலைசெய்து சிறப்புடனே குழிதோண்டி மணலைகொட்டி
பறுகமுடன் நடுமத்தி வகலைவைத்து பாங்குடனே மேலுமந்த மணலைக்கொட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar