போகர் சப்தகாண்டம் 2116 - 2120 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2116 - 2120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2116. கொட்டவே தீமூட்டி புடத்தைப்போடு பொலிவாக எருவதுதான் முப்பதாகும்
சட்டமுடன் தீயாறி எடுத்துப்பாரு சாங்கமுடன் களங்குபோலிருக்கும்பாரு
கட்டமுட னிப்படியே பழச்சார்விட்டுக் கதுமையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வட்டமுடன் முன்சொன்ன மார்க்கம்பாரு வகையுடனே யப்படியே பத்துபுடம்போடே

விளக்கவுரை :


2117. பத்தான புடமதுவும் தீர்ந்தபின்பு பாகமுடன் கெந்தியது களஞ்சிரண்டு
புத்தான ரசஞ்சேர்ந்த தாம்பரத்தில் பூட்டியே தானரைப்பாய் பழச்சாற்றாலே
முத்தமுடன் தானரைப்பாய் நாலுசாமம் முக்கியபாய் பில்லைதட்டி காயவைத்து
சித்தமுடன் ரவிதனிலே காயவைத்து சீர்பெறவே ஓட்டிலிட்டு சில்லுமூடே

விளக்கவுரை :

[ads-post]

2118. மூடவே வெளிப்புடமாய் போடுமைந்தா முகிழவே வாட்டியது பத்ததாகும்
சாடவே தீமூட்டி புடத்தைப்போடு காற்றில்லா விடந்தனிலே போடவேண்டும்
காடவே தீயாறி எடுத்துமைந்தா சாங்கமுடன் பின்னுமந்த பாகம்போல
கூடவே கெந்திவைத்தான் களஞ்சிரண்டு கூசாமல்தான் போட்டு அரைத்திடாயே

விளக்கவுரை :


2119. அரைக்கையிலே பழச்சாற்றாலரைக்கவேண்டும் அப்பனே நாற்சாமமரைக்க வேண்டும்
குறையாமல் முன்போலப் புடத்தைப்போடு குடிலமுடன் புடமதுவும் வன்பதாகும்
நிறையான நிறமதுவும் அங்கிருந்தால் நினைவாக வின்னமொரு ஒன்பதப்பா
கறைக்காணப் பாகமது பிசகிடாமல் கண்டிதமாய்ப் புடம்போடச் சிவக்குந்தானே

விளக்கவுரை :


2120. தானான செந்தூரம் பதனம்பண்ணு தகமைபெற  வெள்ளிதனில் பத்துக்கொன்று
கோனான குருவருளால் வணங்கியேதான் கொற்றவனே தானுருக்கி குருவொன்றீய
தேனான கருபோல யிருக்கும்பாரு செம்மையாம் வோட்டிலிட்டு வூதிப்போடு
பானான மாற்றதுவும் எட்டதாகும் பான்மையுடன் பாடிவைத்தேன் போகர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar