2121. போகருட வாக்கதுவும்
பொய்யாதப்பா பூதலத்தில் வாதிகளோ காணப்போறார்
சாகமுடன் மருந்து வியாதிபோக
சாங்கமுடன் சதாரூப வியாதிக்கெல்லாம்
பாகமுடன் அனுபானம் கொண்டபோது
பறக்குமடா வியாதியெல்லாம் பண்பாய்த்தானும்
வாகமுடன் தேகமது கற்றூணாகும்
வல்லலுட மிறுகியது மேனியாமே
விளக்கவுரை :
2122. மேனியாம் காந்தியது மிகவே
மின்னும் மிக்கான நரைதிரையு மற்றுப்போகும்
கானிமையாய் கண்ணிரண்டும்
குளிர்ந்துகாணும் கடுங்காளைக்கொப்பானசூரனாவாய்
பானிமையாம் பருவமது
சதாகாலந்தான் பாலிக்கு மெப்போதும் ஆயுளுண்டாம்
கானிமையாய் காலாங்கி
ஐயர்பாதம் நண்ணியே சாற்றலுற்றேன் நவிலக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
2123. கேளேதான் யோகமுறை
நடத்தவேண்டும் கெடியான ஸ்தூலத்தை நிறுத்தவேண்டும்
வீனேதான் போகாமல் வாசிபாரு
வீண்காலம் போனாலே யோகம்பாழாம்
தானேதான் சிதாபாசம்
நண்ணவேண்டும் சதாகாலம் சிற்பரத்தைப் பற்றவேண்டும்
ஆனேதான் மனோன்மணியைப்
பணியவேண்டும் ஆத்தாலைப் பூசித்தால் வாழலாமே
விளக்கவுரை :
2124. வாழலாமின்னமொரு கருமானங்கேள்
வகையுடனே நாதாக்கள் கைமறைப்பு
நீழலா மெத்தவுண்டு
நேர்மைபாரு நிலையான வாதவித்தை சூதுமல்ல
வாழலாம் வெகுகோடி
சித்தர்வேதை மாண்பரோ ஒருபோதுளவு சொல்வார்
தாழலாம் பலநூலு
பார்த்திட்டாலும் தாரணியில் யெனைப்போல பகராரன்றே
விளக்கவுரை :
2125. அன்றான சாஸ்திரங்கள் யானும்பார்த்தேன் அடிமைப்போல் சொன்னவர்களாருமில்லை
குன்றான பர்வதம்போல்
பாடிவைத்தார் கோடான கோடிநூல் அனேகமுண்டு
தான்றான நூலெல்லாம்
மறைப்பேயாகும் தகைமையுடன் காண்பதுவும் எளிதேயாகும்
பன்றான மாணிடர்கள்
சுட்டுக்கெட்டு பாரிலே மாண்டவர்கள் கோடிதாமே
விளக்கவுரை :