2126. கோடியாம் தாம்பரத்தின்
துட்டேயப்பா கோளாறுவாராமல் சுத்தித்தேதான்
வாடியே திரியாதே மகிபாகேளு
வணக்கமுடன் தாம்பரந்தான் சேர்தாநாலு
கூடியே தாளகமும்
சேர்தானெட்டு குணமுடனே பொடியாக்கி செப்பக்கேளு
நாடியே தளவாயாஞ் சட்டிதனில்
நாதாக்கள் சொன்னபடி நாட்டிடாயே
விளக்கவுரை :
2127. நாட்டவென்றால் சட்டியிலே
தாரம்பாதி நலமுடனே கீழ்போட்டு நவிலக்கேளு
வாட்டமுடன்
துட்டுநடுமையம்வைத்து வகையுடனே மேலுமந்தப்பொடியைப்போட்டு
தேட்டமுடன்
மேற்பட்டகொண்டுமூடி தெளிவுடனே சீலையது வலுவாய்ச்செய்து
காட்டமென்ற வாலுகையில்
அடுப்பிலேற்றி கணமுடனே யெண்சாமமெரித்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
2128. எரிக்கையிலே துட்டதுதான்
கடங்கமாகி யெழிலான வெட்டையதுபோலாகும்பாரு
நெருக்கமுடன் களங்குதனை
யெடுத்துக்கொண்டு நெடிதான களங்குக்கு நேரேசூதம்
பருக்கமுடன் தான்சேர்த்துப்
பகரக்கேளும் பாகம்போல் பழச்சாறு விட்டுமைந்தா
செருக்கமுடன்
குழியம்மிதன்னிலிட்டு சிதறாமல் தானரைப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :
2129. எட்டான சாமமது யரைக்கும்போது
யெழிலான வெட்டைபோலாகும்பாரு
கட்டான தாம்பரத்தை
பில்லைதட்டி கருவாக ரவிதனிலே காயவைத்து
துட்டான தாம்பரத்தின்
பில்லைதன்னைத் துறையுடனே வகல்தனிலே யிட்டுமைந்தா
சட்டமுடன் குழிதனிலே
மணலைக்கொட்டி சாங்கமுடன் குழிநடுவில் பில்லைவையே
விளக்கவுரை :
2130. வைக்கவே மேலுமந்த
மணலைக்கொட்டி வளமாகத் தீமூட்டி புடத்தைப்போடு
மெய்க்கவே கோழியென்ற
புடத்தைப்போடு மேன்மைபெறத் தானெடுத்துப் பின்னுங்கேளு
சைக்கவே பத்துமுறை
யிப்படியேபோடு சார்பாகச் செந்தூரங் கறுப்புகாணும்
மொய்க்கவே
செந்தூரமெடுத்துக்கொண்டு மொழிபெறவே தாரமது களஞ்சிரண்டே
விளக்கவுரை :