2131. ரண்டான தாரமுடன்
களங்குசேர்த்து நெடிதான பழச்சாறுயிட்டுமைந்தா
திண்டான நாற்சாம மரைத்தபோது
திறமான மயினம்போலாகும்பாரு
உண்டான பில்லையது
லகுவாச்செய்து வுத்தமனே ரவிதனிலே காயவைத்து
கண்டான வகலிலிட்டுச்
சீலைசெய்து கனமுடனே பத்தெருவிற் புடத்தைப்போடு
விளக்கவுரை :
2132. போடவே செந்தூர மேகவர்ணம்
பொங்கமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது
நீடவே செந்தூரந் தானெடுத்து
நீட்சியுடன் பின்னுமரிதாரங்கூட்டு
கூடவேதான்
போட்டுப்பொடித்துமைந்தா குணமுடனே தானரைப்பாய் பழச்சாற்றாலே
வாடவே தானரைத்து பில்லைதட்டி
வளமுடனே ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
[ads-post]
2133. காய்ந்தபின்பு மருந்ததனைப் புடமேபோடு கருமாக யிப்படியே வைந்துபத்து போடு
சாய்ந்ததொரு கைபாகம்
செய்பாகந்தான் தட்டாமல் போட்டுமரச் சிவப்புகாணும்
மாந்ததொரு தாம்பரந்தான்
சிவக்காவிட்டால் மறவாமல் பின்னுமஞ்சி பத்தேபோடு
தேய்ந்துமே செந்தூரமென்ன
சொல்வேன் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே
விளக்கவுரை :
2134. யோகமென்றால் பாகமெதை
மறவாமற்றான் யொளிவாகப் புடந்தோறும்தாரம்காலாம்
பாகமுடன் களஞ்சிரண்டு
போட்டரைத்துக் கருவாகப் புடம்போடச் செந்தூரிக்கும்
சாகமுடன்
செந்தூரமென்னசொல்வேன் சட்டமுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று
தேகமுடன் தானுருக்கி
குருவொன்றீய வீரான செந்தூரம் வேதையாமே
விளக்கவுரை :
2135. வேதையாம் மார்க்கமது
எட்டும்பாரு வேகமுடன் செந்தூரம் தேனிலுண்ண
பாதையாம் சூரணங்கள்
லேகியங்கள் பலமான கிரதங்கள் வெண்ணைதன்னில்
தாதையாம் தானருந்த
வியாதிரூபம் சண்ணுமே தாம்பரத்தின் செந்தூரத்தில்
பேதையாம் தேகமது கற்றூணாகும்
பொங்கமுடன் இம்மருந்து குருவுமாமே
விளக்கவுரை :