போகர் சப்தகாண்டம் 2136 - 2140 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2136 - 2140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2136. குருவான மருந்ததனை பதனம்பண்ணு குவலயத்தில் குஷ்டமுதல் ரோகிக்கப்பா
திருவான மருந்ததனை தின்றுவப்பா திறமுடனே மண்டலந்தான் கொண்டபோது
பருவான தேகமடா கற்றூணாகி பாரினிலே வெகுகோடி காலம்வாழ்வாய்
தருவான காலரிஷி சித்தன்போல தாரிணியில் நீயுமொரு சித்தனாமே

விளக்கவுரை :


2137. சித்தான சித்தர்முனி செய்யும்வேதை தேசத்திலாரேனுஞ் செய்யமாட்டார்
பத்தியுடன் காலாங்கி நாயர்பாதம் பட்சம்வைத்து வடியேனும் உங்களுக்காக
முத்திபெற யடிவணங்கி சாமிதன்னை முடிவணங்கி இந்நூலை வெளியிலிட்டேன்
புத்திவானாயிருந்தால் யெல்லாஞ்சித்தி பூதலத்தில் முழுமக்கள் அறியார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2138. தாமான சாத்திரங்கள் மிகவுஞ்சொல்லி தாரணியில் பித்தனைப்போல் பினத்திக்கொண்டு
பேமானியாகவல்லோ திரிந்துகொண்டு பேரான சாத்திரங்கள் பொய்யுமாக்கி
சாமானியவான்போல வாதுபேசி சதாகாலம் யோனியிடவாசையாலே
சாமானியசைதன்னிய வாசையாலே கடைகெட்டு இடைகெட்டு கலங்கினாரே

விளக்கவுரை :


2139. கலங்கியே பேடிபோல் நாமங்கொண்டு கதிதனக்கு யிடையூறு செய்துகொண்டு
மலங்கியே துப்புரவாய் எல்லாந்தோற்று மானிலத்தில் மதிப்பற்று மானங்கெட்டு
தவங்கெட்டு பதிகெட்டு பலமுங்கெட்டு தாறுமாறாகவே கஞ்சாகொண்டு
புலம்பியே மதுபாணம் மிகுதியாகி பூதலத்தில் கெட்டலைந்தார் கோடிதாமே

விளக்கவுரை :


2140. கோடியாமிருந்தவரை யானுமப்பா பூதலத்தில் குளிகைகொண்டு பறக்கும்போது
வாடியே யிருந்தவரை கண்டேன்கோடி வாய்பிறப்பைக் கண்டறிந்தேன் லக்கோயில்லை
நாடியே காலாங்கிநாயர்பாதம் நான்தொழுது பாடிவிட்டேன் மறைப்பையெல்லாம்
தேடியே யலையாமல் மாணாகேளு தேசத்தில் சித்தனைபோல் வாழ்குவாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar