போகர் சப்தகாண்டம் 2141 - 2145 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2141 - 2145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2141. வாழ்கவே நாகமது சேரைவாங்கி நலம்பெறவே இலுப்பைநெய்யில் சுத்திசெய்து
மூழ்கவே கண்ணாடி கல்லினாலே முயலவே தானரைத்துக்கங்கிபூட்டி
தாழ்கவே கோழியென்ற புடந்தானப்பா தப்பாது மூசைக்குள் நாகம்வைத்து
ஏழ்கவே பொடிதனையே தூவிமைந்தா யெழிலாக வுருக்குபோல் சீலைசெய்யே

விளக்கவுரை :


2142. செய்யவே சீலையது காய்ந்தபின்பு செப்பினேன் கோழியென்ற புடம்தானப்பா
பையவே போட்டபின்பு எடுத்துப்பாரு பாங்கான நாகமது மஞ்சளேறி
மெய்யவே கண்ணதுவும் மிகவொடுங்கி மிக்கான நாகமது வெளுமையாகும்
மிய்யவே இப்படியே பத்துமுறைபோடு பேறானவெள்ளியது பேசலாமே

விளக்கவுரை :

[ads-post]

2143. பேசலாம் சுக்கானின் கல்லையப்பா பெருமையுடன் சேரதுவும் தானெடுத்து
நாசமுள நாலுவகை செயநீர்தன்னால் நலம்பெறவே தானரைப்பாய் நாலுசாமம்
பாசமுடன் பில்லைதட்டி காயவைத்து பாகமுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
நேசமுடன் ரவிதனிலே காயவைத்து நிதமுடனே கெஜபுடத்தில் போட்டிடாயே

விளக்கவுரை :


2144. போடவே பற்பமது என்னசொல்வேன் பொலிவான தவளமது நிறம்போலாகும்
கூடவே நாகத்துக் கங்கிபூட்டி குமுறவே மூசையில் கீழ்மேலிட்டு
வேடவே குழிவெட்டி புடத்தைப்போடு தெளிவாகும் நாகமது தெளிமையாகும்
நாடவே பத்துமுறை இப்படியேபோடு நலமான துய்யானுக் கொப்பதாமே 

விளக்கவுரை :


2145. ஒப்பான வெள்ளியது பத்துக்கொன்று ஓங்குபெற சுயவெள்ளி கூட்டியாடு
செப்பான பாத்திரங்கள் இதற்கீடல்ல சேனவித வாபரணமிதனாலாகும்
உப்பான காய்ப்புக்கு வெளுமைகாட்டும் ஓகோகோநாதாக்கள் அதீதவித்தை
மெய்யான சாஸ்திரங்கள் உளவுபார்த்து மேன்மையுடன் பாடிவைத்தேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar