போகர் சப்தகாண்டம் 2146 - 2150 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2146 - 2150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2146. தானான சாத்திரத்தில் அனேகம்பேர்கள் சட்டமுடன் பாடிவைத்தார் வேண்டுமாற்கம்
வேனான வெகுநூலில் வெள்ளிசொன்னார் வெளியாகச்சொல்லவில்லை இந்தபாகம்
பானான காலாங்கி தனைவணங்கி பாடினேன் சத்தகாண்டம் பண்பதாக
கோனான குருவருளால் அடியேன்தானும் குவலயத்தில் இரைத்துவிட்டேன் மாந்தர்க்காமே

விளக்கவுரை :


2147. ஆமேதான் இன்னமொருகருமானங்கேள் அப்பனே வெள்ளியென்ற காடிக்காரம்
தாமேதான் துலாமதுவும் ஒன்றேயாகும் சார்பான வேங்கையுட பாலாலாட்டி
வேமேதான் சாமமது வரைத்துமேதான் விருப்பமுடன் பில்லைதட்டிக் காயவைத்து
தாமேதான் சொன்னபடி வகலில்வைத்து வலம்பெறவே சீலையது வலுவாய்ப்பண்ணே

விளக்கவுரை :

[ads-post]

2148. பண்ணியே கோழியென்ற புடத்தைப்போடு பாகமுடன் பற்பமது பகரப்போமோ
வண்ணமுடன் பற்பமதை வெள்ளீயத்தில் வாகாக கொடுத்திடவே நீரைவாங்கும்
திண்ணமுடன் பத்துக்கு ஒன்றுதாக்கு திறமான வெள்ளீயம் நீரைவாங்கு
வண்ணமுள்ள வெள்ளியது சொல்லப்போமோ வளமையுடன் நாதாக்கள் கூத்துதாமே

விளக்கவுரை :


2149. கூத்தான கைபாகம் செய்பாகந்தான் குவலயத்தில் கோடியுண்டு யார்தான்காண்பர்
மத்தான சாத்திரத்தில் மறைத்துவைத்தார் மார்க்கமுடன் அடியேனும் தாள்பணிந்து
வேத்தான காலாங்கிநாயர்பாதம் விருப்பமுடன் போற்றியல்லோ தொழுதேன்யானும்
நேர்த்தியுடன் பாடிவைத்தேன் போகர்யானும் நேர்மையுடன் மாணாக்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :


2150. தானான முன்வர்களில் சித்தரதாமும் தயவாகப்பாடிவைத்தார் வெகுநூலப்பா
கோனான கமலரிஷிகள்தானும் கொட்டினார் கோடிமுறை என்னைப்போல
தேனான சாத்திரத்தில் என்னைப்போல தெளிவாகச் சொல்லவில்லை யாருமப்பா
வானான யெந்நூலில் ஒன்றும் பொய்யா வளமையுடன் போகரிஷிவன்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar