போகர் சப்தகாண்டம் 2336 - 2340 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2336 - 2340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2336. பிச்சான பச்சோனான் பிச்சுதானும் பீரான வார்த்தையுட பிச்சுதானும்
மச்சான சாரையுட பிச்சுதானும் மகத்தான மயிலினுட பிச்சுதானும்
கச்சான கரும்பூனை பிச்சுதானும் கருவான வவ்வாளின் பிச்சுதானும்
பச்சான பாம்பினுட பிச்சுதானும் பாங்கான வாணையிட பிச்சுமாமே

விளக்கவுரை :


2337. ஆமேதான் இத்தனையும் ஒன்றாய்கூட்டி அப்பனே முன்சொன்ன தயிலத்தாட்டி
வேமேதான் கபாலமென்ற ஓட்டிலப்பா விருப்பமுடன் மைபிடித்து செப்பக்கேளு
நாமேதான் சொன்னபடி மையின்மார்க்கம் நலமுடனே பரணைதனில் பதனம்பண்ணு
போமேதான் நிர்வானி பூசைசெய்து பொங்கமுடன் உருவேற்றி பூசிப்பாயே

விளக்கவுரை :

[ads-post]

2338. பூசித்து மைதனையே எடுத்துமைந்தா புகட்சியுடன் லாடமதில் திலதத்தீட்டி
நேசித்து ராஜரிடம் சென்றாயானால் நேர்மையுடன் நினைத்ததெல்லாம்வசியமாகும்
காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ கைலாசம்காணியது வுனக்கேயாகும்
வாசியுடன் யோகநிலை நின்றுகொண்டு மகிழ்ச்சியுடன் சதாநித்தம் வாழலாமே

விளக்கவுரை :


2339. வாழவே வின்னமொரு மார்க்கம்பாரு மகத்தான விலங்கைபுரி வேந்தனப்பா
நீழவேதான் செய்தகுளிகையப்பா நீணிலத்தில் மானிடர்க்கு கூறலாச்சு
தாழவே செம்மண்ணம் பூமிதன்னில் தயவுடனே சென்றுமல்லோ குழிதான்வெட்டி
ஆழவே குழிதனிலே ஈச்சம்வெல்லம் அப்பனே வரவுவைக்கல் கலந்துபோடே

விளக்கவுரை :


2340. போடவே யிராமுழுதும் சென்றபின்பு பொங்கமுடன் காலையில் பார்த்தபோது
நீடவே பூநாகம் சூழ்ந்திருக்கும் நெடிதான பூநாகமெடுத்துமைந்தா
வாடவே திரியாதே பூநாகத்தை வாகுடனே தானெடுத்து மண்ணைப்போக்கி
கூடவே புளிப்பென்ற மோறுதன்னால் குணமான மண்ணையெல்லாம் போக்கிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar