போகர் சப்தகாண்டம் 2331 - 2335 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2331 - 2335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2331. தெளித்தவுடன் ஜலமதனைக் விட்டுமைந்தா தெற்றமுடன் இருசாமப்பொழுதில்தானும்
நெளித்துமே விரையெல்லாம் முளைகிளம்பி நேர்ப்புடனே சிறுசெடியா மங்குலந்தான்
களிப்புடனே சித்தர்முனி ரிஷிகளுக்கு கண்கொள்ளாக்காட்சியுடன் கருவுமாகும்
துளிர்ப்புடைய கீரைவித்தை சொல்வார்தான் சுந்தரனே போகரிஷி சொல்லிட்டேனே

விளக்கவுரை :


2332. சொல்லவே வசியமொன்று சொல்லக்கேளு சூரியின்றன் வடவேருக் காப்புக்கட்டி
வெல்லவே முட்பொலியுந்தான்கொடுத்து வேதாந்தத் தாய்தனையே மனதிலுன்னி
செல்லவே தலைப்பிள்ளை மஞ்சத்தானும் சிறப்பான கருங்கொன்றை வடவேர்தானும்
கொல்லனுட மூலிதன்வடவேர்தானும் கூறான பேய்மிரட்டி வடவேர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2333. தரமான கருவாளி வடவேர்தானும் சார்பான வெள்ளெருக்கன் வடவேர்தானும்
கோமான கண்ணனிட வடவேர்தானும் குறிப்பான வழிஞ்சியிட வடவேர்தானும்
வாமான காட்டத்தி வடவேர்தானும் வாகான பராயனிட வடவேர்தானும்
தூமான குமிழினிட வடவேர்தானும் துப்புறவாய் மேனியிட வடவேர்தாமே

விளக்கவுரை :


2334. வடவான வேருடனே ஒன்றாய்க்கூட்டி வளமையுடன் பெரும்பாண்டம் தன்னிலிட்டு
குடவான பானைக்கு துவாரமிட்டு கொப்பெனவே வேறெல்லாம் பாண்டத்திட்டு
திடமான சீலையது வலுவாய்ச் செய்து தேற்றமுடன் குழித்தயிலம் வாங்கியேதான்
தடமான தயிலமதை எடுத்துமைந்தா தாக்குடனே கலசத்தில் வைத்திடாயே  

விளக்கவுரை :


2335. அடைத்துமே தயிலமதை யுரைக்கக்கேளு அப்பனே சுழல்கண்டுபூதவண்டு
படையானை குழியானை மரவட்டைதானும் பாகமுடன் செவ்வட்டை மரவுணிதானப்பா
கடையான தம்பலமாம் பூச்சிதானும் கருவான வல்லூறு பிச்சுதானும்
கடையான செம்போத்து பிச்சுதானும் சார்வான தேவாங்குபிச்சுதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar