போகர் சப்தகாண்டம் 2346 - 2350 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2346 - 2350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2346. ஏற்றவே இப்படியே வஞ்சுபத்து யெழிலாகப் புடம்போடக் கட்டிப்போகும்
சீற்றமென்ற மேற்கவசந் தன்னைநீக்கி சிறப்புடனே தானெடுக்கக் கல்லேயாகும்
மாற்றமென்ற சூதத்தின் கல்லேயாகும் மார்க்கமுடன் கல்லான குளிகைதன்னை
கூற்றனென்னும் மாதர்களைக் கூடுதற்கு கொற்றவனே முறைசொல்வேன் குறைசொல்வேனே

விளக்கவுரை :


2347. குறையான குளிகைதனை யெடுத்து மைந்தா கோலமுடன் வாய்தனிலே யடைத்துக்கொண்டு
முறையான நாற்சாதிப் பெண்கள்தன்னை மூர்க்கமுடன் அணைத்திடிலோ கோடிபெண்கள்
திறமான மையலது நீங்கியேதான் தேசத்திலுனைக்கண்டால் நடுங்குவார்கள்
சிறைநீக்கி யணைவார்கள் மாதர்தாமும் சிறப்புடனே மன்மதன்போல் லீலைசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

2348. செய்யவென்றால் சரீலீலைகிருஷ்ணலீலை ஜெகதலத்தில் யாராலும் முடியாதப்பா
மெய்யான குளிகைதனைப் பதனம்பண்ணு மேதினியில் யாருக்கும் காட்டவேண்டாம்
பொய்யாது எந்தனுட குளிகைமார்க்கம் பூதலத்தில் பெண்களெல்லாம் நடுங்குவார்கள்
மைபூண்டு குளிகையது வாயிலிட்டு மார்க்கமுடன் கெவிளியைப்போல் நீயாவாயே

விளக்கவுரை :


2349. ஆகவென்றால் குளிகையது செய்யவேண்டும் அப்பனேகுளிகைக்கு யின்னஞ்சொல்வேன்
சாகமுடன் வெள்ளியென்ற ஈயந்தன்னை சட்டமுடன் சேரெடுத்து உருக்கித்தீரு
பாகமுடன் குளிகைதனை யிட்டுப்பாரு பதிவான நீரையெல்லாம் வுண்டுமல்லோ
வேகமுடன் மேல்தெரித்து குளிகைதானும் விரைவுடனே தானெகிரி விழுகுந்தாமே   

விளக்கவுரை :


2350. தாமான குளிகைதனை பதனம்பண்ணு தயவுள்ள சிறுபாலா செப்பக்கேளு
சாமான மாகியல்லோ மகிழ்ந்திடாதே சற்பனைகளுபசாமதிகங்கொண்டு
சீமானாய் பெயர்கொண்டு பூதலத்தில் யென்மகனே வெள்ளிதனை விற்றுமாறி
பூமான்போல் பூதலத்தில் வாழ்ந்துகொண்டு புகழ்ச்சியுடன் யெந்நாளும் பொருந்திடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar