திருமூலர் திருமந்திரம் 2546 - 2550 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 2546 - 2550 of 3047 பாடல்கள் 

thirumoolar-thirumanthiram

33. சுத்தாஅசுத்தம்

2546. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே.

விளக்கவுரை :

2547. கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே.

விளக்கவுரை :

[ads-post]

2548. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே.

விளக்கவுரை :

2549. மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

விளக்கவுரை :


2550. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal