திருமூலர் திருமந்திரம் 2831 - 2835 of 3047 பாடல்கள்
2831. பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபடி உள்புகச்
சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
விளக்கவுரை :
2832. அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
விளக்கவுரை :
[ads-post]
2833. மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்
சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே.
விளக்கவுரை :
2834. சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே.
விளக்கவுரை :
12. சொரூப உதயம்
2835. பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே.
விளக்கவுரை :
திருமூலர் திருமந்திரம் 2831 - 2835 of 3047 பாடல்கள்
திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal