திருமூலர் திருமந்திரம் 2851 - 2855 of 3047 பாடல்கள்
2851. ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே.
விளக்கவுரை :
2852. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே.
விளக்கவுரை :
[ads-post]
14. சிவ தரிசனம்
2853. சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.
விளக்கவுரை :
2854. வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
விளக்கவுரை :
2855. பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.
விளக்கவுரை :
திருமூலர் திருமந்திரம் 2851 - 2855 of 3047 பாடல்கள்
திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal