திருமூலர் திருமந்திரம் 3036 - 3040 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 3036 - 3040 of 3047 பாடல்கள் 

thirumoolar-thirumanthiram

3036. புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

விளக்கவுரை :

3037. விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

விளக்கவுரை :

[ads-post]

3038. நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே.

விளக்கவுரை :

3039. புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே.

விளக்கவுரை :


3040. உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே.

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal