1356. பூண்டேனே கடலோரம் விட்டுநீங்கி பொங்கமுடன் மேருவரையேறிப்போனேன்
மீண்டேனே கானாறு
குகைதான்தாண்டி மிக்கான சுனைமுதலுங் கண்டேன்யானும்
தாண்டியே மேலவரை
யேறிப்போனேன் தடாகமுண்டு வதிசயங்கள் கண்டேன்யானும்
வேண்டியே தவசுடனே
ரிஷிகள்கோடி விரைவான செந்நிறக்கொக்குமாமே
விளக்கவுரை :
1357. கொக்கான சிவந்ததொரு
காக்கைக்கண்டேன் குயிலுடனே மயிலாடல் பாடக்கண்டேன்
மிக்கான செம்புலியும்
பசுவுங்கூட மேன்மையுடன் தடாகமதிலிருக்கக் கண்டேன்
வெக்கான புகையுடனே
பனிகள்தனில் வெள்ளானை மேய்ந்துவரும் வண்மைகண்டேன்
சுக்கான பாறைதன்னில்
பொன்னுங்கண்டேன் சூட்சமுனாளியுட மிருகந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1358. தானான கல்லானையானுங்கண்டேன்
தாக்கான சிங்கமுதல் வேங்கைகண்டேன்
பானான படிகமென்ற
நதியைகண்டேன் பாங்கான கெம்பாறு குகையுங்கண்டேன்
வேனான சஞ்சீவி மூலியுண்ட
வெளியான செந்தூரக்காலுமுண்டு
மானான குளத்தருகே சமாதிகோடி
மதிப்பான சித்தர்களைக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
1359. கண்டிட்டென் சித்தர்களை
வணங்கியானும் கைலாசம் பார்க்கவென்று களிப்பாய்வந்தேன்
கண்டிட்டேன் பொன்கருடன்
வெள்ளைகாக்கை கண்காணாபச்சைமலைச சித்தர்கண்டேன்
கண்டிட்டேன் ரிஷிமுனிவர்
ஞானிகண்டேன் காலாங்கிநாதரையான் மனதிலெண்ணி
கண்டிட்டேனவர்பாதம்
பணிந்துநின்றேன் கடாட்சித்து வெந்தனுக்கு வருள்சொன்னாரே
விளக்கவுரை :
1360. அருள்சொன்னார்
வேதாந்தமெனக்களித்தார் அப்பனேசூட்சமத்தின் நேர்மைசொன்னார்
பொருள்சொன்னார் சித்தரகளது
மறைப்புமார்க்கம் பூட்டினார் கருநிறை மறைப்புயாவும்
இருள்சேர்ந்த காட்டகத்தி
லென்னைக்கண்டு யேற்றமுடன் காயாதிகற்பந்தன்னை
தெருளுடனே கூடுவிட்டு
கூடுபாயும் திறமான வித்தைதன்னை தெரிவித்தாரே
விளக்கவுரை :

