போகர் சப்தகாண்டம் 1351 - 1355 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1351 - 1355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1351. பிழைக்கையிலே யெந்தனையும் பட்சிபார்த்து பிரியமுடன் யாரப்பா வென்றுகேட்க
அழைக்கையிலே யானுமங்கே கிட்டிப்போய் அன்பான பட்சியிட மருகில்நின்று
தழைக்கவே வென்பேரு போகரென்றேன் தயவுடனே விக்கிரியைக் காணவந்தேன்
முழக்கையுடன் சித்தர்முனி ரிஷிகள்கூடி முக்கியமா யுபதேசஞ்செய்திட்டாரே 

விளக்கவுரை :


1352. செய்யவே விடைபெற்று குளிகைபூண்டு செயலுடனே மானிடர்கள் பிழைக்கவென்று
மெய்யவே மேதினியில் போறேனென்றேன் மிக்கான பட்சியுமெனைத்தடுத்து
பையவே யெந்தனுக்குப் பிழைக்கும் மார்க்கம் பலவதமாந் தொழிலனைத்து முரைக்கலாச்சு
உய்யவே காயாதிகற்பங் கொண்டேன் வுற்பனமாம் வைப்புமுதல் தெரிந்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1353. தெரியவே பட்சியுட யுபதேசத்தால் தேசத்திலுள்ளதொரு மார்க்கமெல்லாம்
புரியவே யெந்தனுக்குக் காண்பித்தேதான் பூலோகம்போவதற்கு விடையுந்தந்து
சரியவே கிரியைவிட்டு கீழிறங்கி சாந்தமுடன் வந்துநிற்கும் வேளைதன்னில் 
உரியவே பொன்பட்சி யொன்றுகண்டேன் வுத்தமனே யதன்பெருமை சொல்லக்கேளே

விளக்கவுரை :


1354. சொல்லவே பொன்பட்சி கண்டேன்யானும் சுத்தமுட னதனருகில் வந்துநின்றேன்
வெல்லவே யெந்தனையும் பார்த்துமேதான் மேதினியில் யாரென்று என்னைக்கேட்க
புல்லவே யென்பஏரு போகரென்றேன் புகழான மேருகிரிகாணவென்று
மெல்லவே குளிகையது பூண்டுகொண்டு மேதினியிலிட்டுமல்லோ வந்திட்டேனே

விளக்கவுரை :


1355. வந்திட்டேன் என்றதுமே என்னைப்பார்த்து வணக்கமுடன் என்பேரில் கிருபைவைத்து
பொந்திட்டு யென்னுடனே வாவென்றென்ன பொலிவாகப் பட்சியுடன் குளிகைபூண்டு
பந்திட்டு யான்பறந்தேன் பட்சிமார்க்கம் பாகுடனே கடலோரம் போயிருந்தேன்
தந்திட்ட தெந்தனுக்கு வாணிமுத்து தாக்கான மாலையது பூண்டேன்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar