போகர் சப்தகாண்டம் 1346 - 1350 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1346 - 1350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1346. சொல்லவே விடைபெற்று படியிறங்கி சூட்சமுடன் குளிகைதனைபூண்டுகொண்டு
மெல்லவே யடிநோக்கித் திரும்பும்போது மேலான ரிஷியொருவ ரங்கிருந்தார்
வெல்லவே யாரென்று யென்னைக்கேட்டார் வேகமுடன்றான்பயந்து போகரென்றேன்
புல்லவே யேன்வந்தாய் குகைதான்மீது பொல்லாத மனுஷர்கள் வரலாகாதே

விளக்கவுரை :


1347. ஆகாதுயிக்கிரியி லேன்தான்வந்தாய் ஆக்கினைகள் மிஞ்சிவிடு முந்தனுக்கு
சாகாதுவரமூலி சித்தர்தந்தார் சாபமது கொடுத்துவிட்டேன் போபோவென்றார்
போகாது மற்றதொருவித்தையெல்லாம் பொங்கமுட னுனக்களித்தோம் சாபமில்லை
நோகாதுசித்தர்பத்தர் மனம்வேகாமற்றான் மேதினியில் தந்திரமாய் நடந்துகொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

1348. கொள்ளவே வெகுகோடி மனுக்கள்தாமும் குவலயத்தி லுன்னையொரு சித்தனென்பார்
மெள்ளவே செத்தவரை யெழுப்பும்வித்தை மேதினியில் தள்ளுவது மெத்தநன்று
துள்ளவே லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும் சூட்சமத்தை யொருவருக்குஞ் சொல்லப்போமோ
அள்ளவே வனேகவித வித்தையெல்லா மன்புடனே யுனக்கீய்ந்தோம் பிழைபோவென்றார்

விளக்கவுரை :


1349. போவெனவே விடைபெற்றுப் படியிறங்கி பூதலத்தில் யான்வரவே நோக்கங்கொள்ள
காவெனவே கெண்டபேரண்டபட்சி காணவே யெந்தனையுங் கையமர்த்தி
சாவெனவே யுன்னைநானிப்போதல்லோ சபிக்கவே வந்தேனென்றருகில்வந்து
கூவெனவே சத்தமிட்ட தொனியுங்கேட்டு கோடிவரைப் பட்சியங்கே சூழலாச்சே

விளக்கவுரை :


1350. சூழவே நான்பயந்து நடுநடுங்கி சொல்லவொண்ணா திகிலுடனே யேக்கங்கொண்டு
தாழவே மூர்ச்சையுடன் கீழ்விழுந்து தடுமாறி திசைமாறி நினைவுகெட்டு
ஆழவே யடியேனுமிருக்கும்போது அங்ஙனவே கெண்டபேரண்டபட்சி
மீளவே யெந்தனுக்கு சஞ்சிமூலி யின்பமுடன் றான்கொடுக்க பிழைத்தேன்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar