போகர் சப்தகாண்டம் 1341 - 1345 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1341 - 1345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1341. பாரான மேருகிரிதன்னைவிட்டு பாங்குடனே குளிகைதனை பூண்டுகொண்டு
நேரான வாஸ்தான கிரியைக்காண நேர்மையுடன் விடைபெற்றுவந்தேயானும்
காரான மலைதனிலே யேறிப்போனேன் கண்டேனே சித்தருட சமாதிதன்னை
நேரான வெட்டவெளி தன்னைக்கண்டு நின்றிட்டே னொருவரையங் காணகிலேனே

விளக்கவுரை :


1342. காணவே வென்மனது கலங்கும்போது கண்டேனே சித்தரொருவர் முன்னேநிற்க
தோணவே காயாதி கற்பங்கொண்ட தோரான சித்தொருவர் மாயாசித்து
காணவே வென்னெதிரில் ரூபங்கொண்டு நளினமுடன் றான்சபிக்கவந்தயென்னை
பாணப்போல் கோபமதைத்தானடக்கி பட்சமுட னுபதேசஞ்செய்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

1343. செய்யவே யெந்தனுக்கு தீட்சைமார்க்கம் செப்பினா ரடியேனும் பிழைக்கவென்று
பையவே சித்தொருவராதிரம்பேர் படைகூட்டந் தன்னுடனே சூழ்ந்துகொண்டார்
தொய்யவே யடியேனும் திகிலடைந்தேன் தோன்றவில்லையெந்தனுக்கு என்னசெய்வேன்
வையவேயடியேனும் காலாங்கிதம்மை வரங்கொடுக்க மனதிலே நினைத்திட்டேனே

விளக்கவுரை :


1344. நினைத்திட்டே னென்சாமி குருவேயென்றேன் நினைத்ததொரு வண்மைதனை யறிந்துகொண்டார்
முனைந்திட்டு சித்தரெல்லாம் என்னைப்பார்த்து முழிமிரட்டி காலாங்கி நினைத்தாயல்லோ
கனைத்திட்டு மனோலயத்தை யறிந்துகொண்டார் காலாங்கிநாயனுடசீஷனென்று
புனைந்திட்டு வென்மீதில் பட்சம்வைத்து புகழ்ச்சியுடன் கொண்டனைத்தா ரென்னைத்தானே

விளக்கவுரை :


1345. என்னையே கொண்டுசென்று குகைக்குள்வைத்து யெழிலான வித்தைகளைக் கற்பித்தேதான்
பொன்னையே யிருக்குமிடந் தானுங்கண்டு புகழான வதிசயங்களெல்லாங்காட்டி
தன்னையே குருவர்க்கமென்றே சூட்டி தயவாக வுயிர்கொடுக்கு மூலிசொல்லி
பின்னையே போகவெனக் குறுதிகூறி பிழையென்று வுத்தாரஞ் சொல்லிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar