1336. விடைதந்தா ரெந்தனுக்கு
சித்தர்தாமும் வெளிப்பட்டேன் மேருகிரிவரையிற்சென்றேன்
மடையுடனே சுனையுண்டு
குகைதானுண்டு மார்க்கமுடன் சித்தர்கள் கோடாகோடி
நடையுடனே யவர்களிட
பாதஞ்சென்றேன் நாதாக்க ளிருப்பிடமுந் துறையுங்கண்டேன்
சடையுடனே ரிஷிதேவர்
தவத்தில்நிற்க சாஷ்டாங்கம் பணிந்து தெண்டனிட்டேன்பாரே
விளக்கவுரை :
1337. பாரேதானவர்களிம்
பற்றிப்போனேன் பதிவாக திருமுடியைச் சாய்த்துநின்றேன்
சீரேதானெந்தனுக்கு
கருவுசொன்னார் சிறப்பான மூலியுட வுளவுசொன்னார்
நேரேதான் கிரேதாயியுகத்திலப்பா
நெடிதான சமாதியிலிருந்தோமென்றார்
நீரேதான் பூலோகஞ்
சென்றாயானால் நேர்ப்புடனே யெமைநினைத்து துதியென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
1338. துதிக்கையிலே நீநினைத்த
காரியந்தான் துப்புரவா வொவ்வொன்றுஞ்சித்தியாகும்
மதிப்புடனே யின்னமுண்டு
மனேகசித்தர் மகாகோடிரிஷிமுனிவர் சொல்லப்போமோ
கெதிப்புடனே யவர்மனது
நோகாமற்றான் கொண்டனைத்து கார்க்கவென்று மனதிலெண்ணி
நிதிப்புடனே சதாகாலம்
பூசைசெய்து நேர்மையாய் வாழவே வசனித்தாரே
விளக்கவுரை :
1339. வசனிக்க மேருவுக்கு
கடைபாகத்தில் வாகான குளமுண்டு குகைதானுண்டு
துசனிக்க கருஞ்சாமரை
மரமுமுண்டு துடியான கருநெல்லிமரமுமுண்டு
தசனிக்க வேலக்காய்
மரமுமுண்டு தாக்கான கருவேங்கை விருட்சமுண்டு
குசனிக்க மடையொன்று வாறொன்று
குறும்பராம் சித்தர்களைக் கண்டேன்தானே
விளக்கவுரை :
1340. தானான சித்தர்களின்
குருக்கள்மார்க்கம் சதகோடிசூரியர்போல் பிரகாசிப்பார்
தானான வாற்றருகே
வந்துநிற்பார் கருவான சாத்திரங்கள் தர்க்கஞ்சொல்வார்
பானான
சிவயோகந்தன்னைச்செய்வார் பாங்குடனே மனோலயத்தைத் தாவிநிற்பார்
தேனான வமுர்தமது
முண்டுசித்தர் தேத்தமுடன் வாசமதுசெய்வார்பாரே
விளக்கவுரை :

