1331. தொழுதிட்ட சித்தரமுனி
கோடாகோடி தோற்றமுடன் னெனைப்பார்த்து வாவென்றேதான்
முதிட்ட பாலகனை மேருகாண
முழுதிலும் வந்ததுனுக்கு குற்றமல்லோ
தழுதிட்டு வந்தவுனைச்
சபிக்கவென்று சட்டமுடன் சொல்லுகிறோ மைந்தாவென்றார்
அழுதிட்டே னப்போது
யென்னைப்பார்த்து அங்ஙனவே யாதரிக்க மனங்கொண்டாரே
விளக்கவுரை :
1332. மனங்கொண்டார் சித்தர்முனி
சிலதுபேர்கள் மதித்துமே ஞானோபதேசஞ்சொல்ல
சினங்கொண்டார் சித்தர்முனி
சிலதுபேர்கள் சீறியேயென்பேரிற் கோபங்கொண்டார்
கனங்கொண்ட சித்தர்களை
வணங்கியானும் காலடியில் தொழுதிட்டேனே பலநாளுந்தான்
தினங்கொண்டு யெந்தனுக்கு
விசேஷஞ்சொல்லி திறமான துறப்புமுதல் காட்டிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
1333. காட்டினார் சுரங்கமுதல் குகைகள்யாவும் கருவான மறைப்புமுதல் யாவுஞ்சொல்லி
மூட்டினார் சித்தகிரி
பர்வதத்தை முனையான மூலிகைகள் முழுதும்பூசி
மாட்டினார் துருத்திகொண்டு
வூதிக்காட்டி மகாமேரு சாரலைப்பழுக்கச் செய்தார்
நீட்டமுடன்
போகரிஷியானும்பார்த்து நீனிலத்தில் மதிமயங்கி விழுந்திட்டேனே
விளக்கவுரை :
1334. விழுந்திட்ட வடியேனை
ரிஷிகள்பார்த்து விருப்பமுடன் மூர்ச்சையது தெளியவென்று
அழுந்திட்ட வெந்தனுக்கு
களைகள்தீர அருமூலி சன்றனையே நசியமீய்ந்தார்
எழுந்திட்டு யானுமங்கே
சரணஞ்செய்தேன் யெழிலான மறைப்புமுத லுளவுஞ்சொன்னார்
முழுந்திட்ட தாவடவாம்
வச்சிரகண்டி முடிமேலேதான்போட்டார் சித்தர்தாமே
விளக்கவுரை :
1335. சித்தர்முனி ரிஷிகள்தவ
யோகிதானுஞ் சிறப்பாக வெந்தனுக்கு வுபதேசித்து
கத்தனென்னுங்
கைலாசமேருதன்னைக் காணவென்று சிகரம்வரை செல்வதற்கு
சத்தமுட
னடையாளடையாளங்கையிலீந்து சுகமுடனே மேருவரைக்கடந்துபோக
சத்தமுடன் றானிருக்குங்
குகையிற்சென்று சாங்கமுடன் போவதற்கு விடைதந்தாரே
விளக்கவுரை :

