போகர் சப்தகாண்டம் 1326 - 1330 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1326 - 1330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1326. மரங்கண்டேன் நிறங்குலைந்தேன் மேருதன்னில் மகத்துவங்கள் சொல்லிமுடியாதுகண்டீர்
வரங்கொண்ட சித்தரகளுமங்கேயுண்டு வடிவான செம்புரவி பொன்மானுண்டு
நிறங்கொண்ட கரும்பசுவு காமதேனு நெடிதான செம்புலிகளனேகங்கண்டேன்
தரங்கொண்ட தேவதா விருட்சமுண்டு தழைதின்றால் தேகமது கற்பமாமே

விளக்கவுரை :


1327. கற்பமுண்ட சித்தர்களனேகமுண்டு காலவரை கோடிவரை யுகாந்தகாலம்
கெற்பமுடன் சமாதியிலே நின்றுகொண்டு தேவதாபூசையுடன் சிரங்குனிந்து
விற்பனராய் சாத்திரங்கள் யாவுங்கொண்டு வேதாந்த தாய்தனையே மனதிலெண்ணி
பொற்புடனே தாள்பணிந்து சதாநிர்த்தந்தான் போற்றி யஞ்சலிசெய்து புகழுவாரே

விளக்கவுரை :

[ads-post]

1328. புகழான வஞ்சலியைக் கண்டுயானும் பொங்கமுடன் திரும்பியே மலையிற்சென்றேன்
சகழான மண்டபமும் ஓடைகண்டேன் தாக்கான சூரியன் சந்திரனுங்கண்டேன்
துகழான முக்கடிகை கண்டேன்யானும் தோற்றவில்லை மறுபடியும் பரிதிபரிதிகாணேன்
மிகழான நட்சத்திர மிருபத்தேழு மிக்கவொரு கடிகைதன்னில் கண்டிட்டேனே

விளக்கவுரை :


1329. கண்டிட்ட மறுகாலும் படியிலேறிப் பார்ப்பதற்கு வென்மனங்கேளாமற்றான்
துண்டிட்ட சித்திரகிரி பக்கஞ்சென்றேன் துரைகோடி வழிகோடி தெரியவில்லை
கொண்டிட்ட மலைமீதிலேறிப்போனேன் குறிப்புடனே தனிவாசல் தானடைந்து
லிண்டிட்ட கதவருகில் யானுஞ்சென்று விருப்பமுடன் கைதட்டி நின்றேன்பாரே

விளக்கவுரை :


1330. தட்டிநீ யாரென்றுயென்னைக்கேட்டார் தயவுடனே காலாங்கி தனைநினைத்து
முட்டியுடன் றாள்பணிந்து வணங்கிநின்று முடவனாம் போகரிஷி யென்றுரைத்தேன்
சட்டமுடன் குளிகையது பூண்டுகொண்டு சாஞ்கமாய் மேருகிரி காணவந்தேன்
திட்டமுட னெந்தனுக் குபதேசங்கள் சிறப்புடனே போதிக்கத் தொழுதிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar