போகர் சப்தகாண்டம் 1321 - 1325 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1321 - 1325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1321. செய்திட்ட பிற்பாடு சிறியேன்தானும் சிறப்புடனே மேருவுக்கு குணபாகத்தில்
செய்திட்ட ரிஷிகோடிசித்தரப்பா மெய்மறந்து தவநிலையில் நிற்கக்கண்டேன்
பொய்த்திட்ட மில்லாதசித்தர்தம்மை பூதலத்தில் காண்பதுவுமறிதேயாகும்
வைதிட்டால் குற்றமில்லை யென்றுசொல்லி வாகுடனே யவரருகில் நின்றேன்பாரே

விளக்கவுரை :


1322. பார்க்கையிலே சித்தர்முனி ரிஷிகள்தாமும் பாகுடனே யெந்தனையாரென்றுகேட்டார்
மேற்கையிலே யிருந்ததொரு சித்தர்தம்மை மேன்மையுடன் றாள்பணிந்து வணக்கஞ்சொன்னேன்
கார்க்கவே வேண்டுமென்று காலாங்கிதம்மை கருத்திலே தானினைத்து குளிகைபூண்டு
தீர்க்கமுட னென்பேரு போகரென்றேன் திறமையுடன் சித்தர்களு மருள்செய்தாரே  

விளக்கவுரை :

[ads-post]

1323. அரஉள்செய்தா ரெந்தனையு மழைத்துச்சென்று அனேகவித தருமான வுளவுஞ்சொல்லி
பொருளிந்த குகைமுதலு மருமங்காட்டி போக்கான வழிதுறையு மிகவுரைத்து
இருள்சேர்ந்த பாறையது தன்னிற்சென்று யெழிலான பச்சைமலை தன்னைக்காட்டி
இருள்சேர்ந்த பொன்வளையுந் தலமுங்காட்டி மூதண்டமான ரசக்கிணற்சொன்னாரே

விளக்கவுரை :


1324. சொன்னாரே காஞ்சான மாமலையுங்காட்டி துரைகோடி ரவிவிளையுமிடமுங்காட்டி
மின்னேதான் கெம்பினுட விளைவுஞ்சொன்னார் மேலான சிகரவரைமுனையுங்காட்டி
அன்னேதா னருமையுடன் சுனையுங்காட்டி அப்பனே கருமீலிவிளைவுங்காட்டி
பொன்னேதான் விளைகின்ற வாறுங்காட்டிப் பூதலத்தில் போகவென்ன விடைதந்தாரே

விளக்கவுரை :


1325. விடைதந்தார் மேருகிரி மேலேசென்றேன் மிக்கான சித்திரக்கூடந் தன்னைக்கண்டேன்
தடைமுகமாந் தடாகமதில் புஷ்பங்கண்டேன் தாக்கான கருஞ்செந்தாமரையுங் கண்டேன்
படைமுகமாம் ராட்சதாள் கூட்டமுண்டு படியோரம் யாராலும்கிட்டவொண்ணா
சடைமரமாஞ் சவ்வாது மரமுங்கண்டேன் சந்தனமாம் விருட்சமுடன் மரங்கண்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar