போகர் சப்தகாண்டம் 1316 - 1320 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1316 - 1320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1316. கேட்டவுடன் காலாங்கி நாயர்தம்மைக் கிருபையுடன் பணிந்துநினைத்துயானும்
தேட்டமுடன் சீனபதிதனிலிருந்து திறமான குளிகையது பூண்டுகொண்டு
வாட்டமுடன் மேருகிரி காணவந்தேன் வாகுடனே யாதரித்து கார்க்கவென்றேன்
கூட்டமுடன் சித்தர்களு மொன்றாய்க்கூடி கூறினார் ஞானோபதேசந்தானே

விளக்கவுரை :


1317. தேசமாம் சாத்திரத்தின் தொகுப்பைக்கேட்டேன் தெளிவாக தாமுரைத்தார் வுளவையெல்லாம்
மோசமில்லை யென்றுசொல்லி யென்னைநம்பி மொழிந்திட்டார் சித்தர்களின் மறைப்பையெல்லாம்
பாசமுன் கிட்டிருந்து யழைத்துப்போய் பாங்கான கிடாரமுதல் ஜெயசூதத்தை
நேசமுடன் தானிருக்குஞ் செந்தூரத்தை நிட்சயமாயெந்தனுக்கு காண்பித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

1318. காண்பித்தார் சித்தர்தம்மை விட்டுநீங்கி கடந்துமேசிகரம்வரை யேறலானேன்
காண்பித்தார் மேருவுக்கு கீழ்பாகத்தில் கருவான மூலியுண்டு வேதையுண்டு
காண்பித்தார் குகைமுதலா மடங்கள்தம்மை கடியான சித்தர்முத லிருக்குமார்க்கம்
காண்பித்தார் சதகோடி ராமலிங்கம் கருத்துடனே தானிருக்குந் தலங்கண்டேனே

விளக்கவுரை :


1319. தலங்கண்டேன் சதகோடி சமாதிகண்டேன் தாக்கான சித்தரகளின் பெயருங்கண்டேன்
வலங்கண்டு யிடம்புரியாய் சுத்திவந்தேன் வாகுடனே வர்ச்சனைகள் மிகவுஞ்செய்தேன்
பலங்கொண்ட சித்தருட சமாதிநின்றேன் படிகமென்ற லிங்கமதை பணிந்துநின்றேன்
கலங்கொண்டு காலாங்கி நாயர்தம்மைக் கருத்திலேதானினைந்து கலங்கிட்டேனே

விளக்கவுரை :


1320. கலங்கிட்ட யெந்தனையுங் கார்க்கவென்று கடிதான சமாதிதனி லிருந்தசித்தர்
துலங்கிட்ட சமாதிதனி லிருந்துகொண்டு துப்பரவா யெந்தனையும்தட்டிக்கேட்க
விலங்கிட்டு யானுமது தூரநின்று விருப்பமுடன்றாள்பணிந்து போகரென்றேன்
மலங்கிட்டு சமாதிதனிலிருந்த சித்தர் மார்க்கமுட னுபதேசஞ்செய்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar