போகர் சப்தகாண்டம் 1311 - 1315 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1311 - 1315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1311. சொல்லென்றார் சித்தரெல்லா மொன்றாய்கூடி சூழ்ந்துகொண்டா ரெந்தனையங் கிட்டேவந்து
கல்லென்ற கல்லோடே யான்பயந்து கர்த்தாவாங் காலாங்கி நாயர்தம்மை
புல்லனான் சிறியனும் யாநினைத்து புத்தியுடன் தைரியங்கள் மிகவுண்டாகி
வெல்லவே சித்தர்களை யடிபணிந்து விருப்பமுனென்பேரு போகரென்றேன்  

விளக்கவுரை :


1312. போகர்நான் குளிகையிட்டு சீனம்விட்டுப் பொங்கமுடன் மேருகிரிதன்னைக்காண
வேகமுட னாலுவரையேறிவந்தேன் வேதாந்த மாயதனையே காணவில்லை
வூகமுடன் வடிவேலர் தன்னைக்கண்டேன் யுற்றதொரு பதுமைமுகம் சேர்வைகண்டேன்
சாகமுன் சித்தருட தெத்துகண்டேன் சண்முகத்தின் சூலமுதல் மயில்கண்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1313. மயில்கண்டேன் சுப்பிரமணியர் தன்னைகண்டேன் வாகான பதுமையொன்று வங்கேகண்டேன்
ஒயிலுடனே பதுமையுபதேசங்கேட்டேன் ஓங்காரச் சத்தமது காதிற்கேட்டேன்
வெயிலுடனே பனிமுந் திசைகள்மாறி வெட்டடெளி சின்மயத்தின் ஜோதிகண்டேன்
குயிலுடைய சத்தமது பதுமைகூற கொற்றவரே தமதிடத்தில் வந்திட்டேனே

விளக்கவுரை :


1314. வந்திட்டே னென்றதுமே வார்த்தைசொன்னேன் வாராக எந்தனுக்கு கிருபைகூர்ந்தார்
முந்திட்ட சாபமதை நிவர்த்திசெய்து மொழிந்திட்டார் மாநிலத்தில் போகவென்றார்
பிந்திட்டு அடியேனும் சித்தர்முன்னே பேசினேன் வெகுவாக வாதுசெய்தேன்
தந்திட்டா ரெந்தனுக்கு சாத்திரங்கள் சதகோடிவித்தைகளை யறிந்திட்டேனே

விளக்கவுரை :


1315. அறிந்தேனே மேருவுக்குத் தென்பாகத்தில் அஷ்டவிதசித்தர்கள் தானங்கிருந்தார்
பறிந்திட்டு யவர்களைநான் தெரிசித்தேதான் பாங்குடனே யவரிடமும் வணங்கிநின்றேன்
சறிந்திட்ட சாத்திரங்கள் மிகவுஞ்சொன்னார் சரிகைகிரியோகமுதல் யாவுஞ்சொன்னார்
குறிந்திட்ட வஷ்டாங்க யோகஞ்சொல்லி கொற்றவாநீ யாரென்றெனைக்கேட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar