போகர் சப்தகாண்டம் 1306 - 1310 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1306 - 1310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1306. என்றேனே பதுமைக்கு விடையுஞ்சொன்னேன் என்மீது பதுமையது கிருபைவைத்து
குன்றான பொருளெல்லா மெனக்கோதித்து குவலயத்தில் போகவென்று வாக்களிக்க
பன்றான சிகரவரைக் காணவென்று பாங்குடனே மறுபடிய மேலேவந்தேன்
ஒன்றான பதுமையது பின்னுங்கண்டேன் ஓகோகோநீயாரென் றோதலாச்சே

விளக்கவுரை :


1307. ஓதவே யான்வணங்கி ஒடுங்கிநின்று ஒப்பமுடன் தான்பணிந்து தொழுதுநின்றேன்
நீதமுடனெந்தனுக்கு வுபதேசங்கள் நிட்களமாம் பூரணத்தை யோதிற்றங்கே
போகரிஷியங்கிருந்து வாழ்த்து சொன்னார் பூதலத்தில் போய்பிழைக்க வயனஞ்சொன்னார்
தோதமுடன் நானனைத்தும் கேட்டுமேதான் தோற்றமுடன் தங்களிடம் கண்டேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

1308. கண்டுமே தானுரைத்தே னதீதமார்க்கம் கைலாசநாதரங்கே கிருபைகூர்ந்து
அண்டமுடன் மேருகிரி தன்னில்வாழும் அழகான மயில்மீதி லிருந்துகொண்டு
தொண்டனெனக் கதிகமுட னுபதேசங்கள் சுருக்கமுன்றானுரைத்தார் ஞானம்நூறு
விண்டுமே மேல்வரையிற் சிகாரம்போனேன் மிக்கான கணபதியைக் கண்டிட்டேனே
விளக்கவுரை :


1309. இட்டேனே கணபதியை யானுங்கண்டேன் இயலான மேருகிரி தன்னில்வாழும்
அட்சான பெருச்சாளி வாகனத்தி லன்புடனே வினாயகரும் வீற்றிருந்தார்
கிட்டான தேவருட னனேகம்பேர்கள் கிருபையுடனங்கிருந்தார் சேர்வைகண்டேன்
சட்டான தோத்திரமு மறுநூறுசொன்னார் சர்ங்கமுட னுபதேசம் பெற்றேன்பாரே

விளக்கவுரை :


1310. பாரேதான் மேருகிரி பக்கம்போனேன் பாங்கான சுனையுண்டு குகைதானுண்டு
சீரேதான் சித்தரவர் நூறுபேர்கள் சிறப்பாக வங்கிருப்பார் தவயோகத்தில்
நேரேதா னவர்கள்முகந்தன்னில் நின்றேன் நிஷ்கரமா யெந்தனையும் நிமிர்ந்துபார்த்தார்
சேரேதா னிவ்விடத்தில் வந்ததென்ன சிறியதோர் பாலகனே சொல்லென்றாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar