போகர் சப்தகாண்டம் 1301 - 1305 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1301 - 1305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1301. போகுமென்று சொல்லியல்லோ வந்தவித்தை பூதலத்தில் செய்யமுடி போகாதென்று
சாகும்வித்தை எழுப்புவதும் சரியுமல்ல தற்கால முந்தனுக்கு மனேகவித்தை
பாகுடனே ஜெகஜால மிந்திரஜாலஜாலம் பாங்கான கோகர்ண மயேந்திரஜாலம்
ஆகுடனே கூடுவிட்டுப் பாயம்வித்தை அப்பனே எந்தனுக்கு கொடுக்கலாச்சே

விளக்கவுரை :


1302. கொடுக்கவே எந்தனுக்கு ரிஷியும்வந்து குறிப்புடனே எந்தனது ராசிபார்த்து
விடுக்கவே வேண்டுமென்று மனதிலெண்ணி வேதாந்த நுட்பமெல்லா மெனக்கோதித்து
தொடுக்கவே வடிவேலர் கோயில்iமுன்னே துப்புறவாய் போவதற்கு துறையுஞ்சொன்னார்
நடுக்கவே சிகரம்வரை மேலேயேறி நளினமுடன் வேலவரைக் கண்டிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

1303. கண்டிட்டேன் வேலவரையடிபணிந்தேன் காலாங்கிநாதரைத் தொழுதுபோற்றி
மண்டிட்டு கால்பணிந்து யடிவணங்கி மகாதேவா சரணமென்று தொழுதேன்யானும்
தெண்டிட்ட வடியேனை வேலர்பார்த்து தேவரிடம் வந்ததென்ன பாலாவென்றார்
விண்டிட்டு யானுமப்போ வரலாறுசொன்னேன் விரும்பியே எந்தனையு மாட்கொண்டாரே

விளக்கவுரை :


1304. கொண்டவுட னடியேனுந்தான் பணிந்து குறிப்புடனே காலாங்கிதனை நினைத்து
அண்டசராசரங்களெல்லாம் காணவென்று அப்பனே குளிகைதனை பூண்டுகொண்டு
கண்டறிய வேண்டுமென்று மேருதன்னில் கருத்துடனே சிகரவரை யேறிவந்தேன்
திண்டமுன் பதுமையொன்று யானுங்கண்டேன் திறமான சித்தொருவ ரிருந்திட்டாரே

விளக்கவுரை :


1305. இருந்திட்ட சித்தரென்னை கண்டுவந்து இனிதாக வாய்மொழிகள் தாமுரைத்தார்
வருந்திட்டு யானுமெனக்கெதியேதென்றேன் வாகான சித்தரவர் பேசவில்லை
கருந்திட்ட பதுமையது தன்னைபார்த்து சட்டமுடன் கண்சாடை காட்டினார்பார்
மருந்திட்ட பதுமையது யெனையாரென்ன மார்க்கமுடன் நான்பயந்து போகரென்றேன்

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar