1296. புதுமையுடன் கனியொன்று
யெனக்களித்தார் பொங்கமுடன் பசியாறி வீற்றிருந்தேன்
பதுமைதனை யவரிடத்தில்
கண்டேன்யானும் பட்சமுட னதுவருகில் நின்றிருந்தேன்
பதுமையுட னென்னிடத்தில்
மிகவும்பேசி கருவான மறைப்பையெல்லாம் பிரித்துக்காட்டி
பதுமையுட
னுபதேசஞ்செய்துயென்னை மோட்சவழிக்கேகும்வழி சொல்லலாச்சு
விளக்கவுரை :
1297. ஆச்சப்பா பிரதமையின் மகிமைதானும் அதற்கப்பால் மேருவின் வடபாகத்தில்
பேச்சப்பா யில்லையது
பதுமையப்பா பேரான பதுமையொன்று யங்கேகண்டேன்
மூச்சப்பா சுவாசனையால்
வயிறென்றெண்ணி முன்னிருந்த பதுமைபோலிருக்குதென்று
விச்சப்பா வதனிடத்தில்
நின்றேயானும் வேடிக்கை வினோதமெல்லாஞ் சொல்லலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
1298. சொல்லுவது வப்பதுமை
புதுமைமார்க்கம் சுந்தரனேயாரென்று யெனைதான்கேட்க
மெல்லவே யான்பயந்து
நடுநடுங்கி மெத்தவுபசாரமுடன் வணங்கியானும்
வெல்லவே காலாங்கி நாதர்பாதம்
விருப்பமுடன்தான்தொழுது யெடுத்துரைத்தேன்
புல்லவே யென்பேரு போகநாதன்
புகழ்ச்சியுடன் குளிகையிட்டு வந்திட்டேனே
விளக்கவுரை :
1299. வந்திட்டேன்
சீனபதியான்கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன்
குந்திட்ட சித்தருட
புத்துகண்டேன் கோடித்து அவர்பாதம் பணிந்துநின்றேன்
திந்திட்ட பதுமையொன்று
முன்னே கண்டேன் மொழிந்திட்ட வனேகவித வதிசயங்கள்
தந்திட்ட தெந்தனுக்கு
மனேகவண்மை தயவுடனே கொடுத்ததென்று மொழிந்திட்டேனே
விளக்கவுரை :
1300. மொழிந்திட்ட வார்த்தைதனைக்
கேட்டபோது முனையான பதுமையது யென்னைப்பார்த்து
சுழிந்திட்ட வனேகவித
வித்தையெல்லாஞ் சூட்சமுடனெ ந்தனுக்குச் சொல்லலாச்சு
பருந்திட்ட நானுமல்லா
வெகுவாப்பேசி பாங்கான வுயிர்கொடுக்கு மூலிகேட்டேன்
வழிந்திட்டு யெந்தனுக்கு
சொன்னதென்றால் வையமெல்லாம் சித்தாகப் போகுந்தானே
விளக்கவுரை :

