போகர் சப்தகாண்டம் 1291 - 1295 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1291 - 1295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1291. பதியான மேருகிரிதன்னிற்சென்றேன் படியான சிகரவரை யானுங்கண்டேன்
நதியான தனையொன்று வங்கேகண்டேன் நாதாக்களிருப்பிமுந் துறையுங்கண்டேன்
பொதியான புத்தொன்று வங்கேயுண்டு புகழான சித்தொருவ ரதிலேகண்டேன்
துதியான மனதாரஞ்செய்துகொண்டு தொழுதுமே யவர்பாதம் பணிந்திட்டேனே

விளக்கவுரை :


1292. பணிந்திட்டேன் சித்தரையான் வணங்கிமெத்தப் பரிவாகநின்றுகொண்டு பாண்மைகேட்டேன்
துணிந்திட்டு யவரிமும் பத்திவைத்து தொண்டனாய்க் கீழிருந்து துதித்துநின்றேன்
கனிந்திட்டு என்பேரில் கிருபைகூர்ந்து கடாட்டிக்க யெந்தனைநீ யெவர்தானென்றார்
வணிந்திட்டு யென்பேர் போகரென்றேன் வந்தவரலாறென்னசொல்லென்றாரே  

விளக்கவுரை :

[ads-post]

1293. சொல்லவே சீனபதிநடந்துயானும் துப்புரவாய் குளிகையது பூண்டுகொண்டு
மெல்லவே மேருகிரி பார்க்கவென்று மேன்மையாய்த் தங்களிடஞ் சேர்வைகண்டேன்
புல்லவே யவரெனக்கு வாக்களித்தார் பூதலத்தில் மனிதரப்பா வந்தாயென்றார்
அல்லவே நானுமுன்னை சபிப்பேனென்றார் அப்பனே மனமொருத்தேனென்றிட்டாரே

விளக்கவுரை :


1294. என்றைமே பாலனுமே ஏங்கிநிற்க என்பேரில் மறுபடியுங்கிருபைவைத்து
குன்றுமேல் வந்ததுனக்கதிககுற்றம் கொடிதான தண்டனைகள் செய்யவேண்டும்
ஒன்றுமே யாமுனக்கு செய்யாமற்றான் வுத்தமனே வுபதேசஞ்செய்வேனென்றார்
கன்றுடனே தாய்சேர்ந்தக் கதையைப்போலக் காத்திருந்தேன் வெகுநாளாயானுந்தானே

விளக்கவுரை :


1295. காத்திருந்த யெந்தனுக்குக் கடாட்சம்வைத்து கைலாச மேருகிரிவந்த பாலா
பார்த்திருந்து துவாபரமாய் யுகத்தில் யானும் பர்வதாமாமேருகிரி தன்னில்வந்தேன்
சேர்ந்திருந்த வதிசயங்கள் மெத்தவுண்டு செப்பினாரெந்தனுக்கு வெளிதாக
போர்த்திருந்த புலிதோலினாசனத்தை பொங்கமுட னெனக்களித்தார் புதுமைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar